கொரோனா வைரஸ் : ஊரடங்கு உத்தரவை மீறிய 2 ஆயிரத்து 908 பேர் கைது!

Thursday, March 26th, 2020

கொரோனா வைரஸ் தொற்று பரவுவதனை தவிர்க்கும் நோக்கில் பிறப்பிக்கப்பட்டுள்ள காவல் துறை ஊரடங்கு உத்தரவினை மீறிய 2 ஆயிரத்து 908 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.

இதேவேளை ஊரடங்கு உத்தரவினை மீறி செலுத்தப்பட்ட 748 வாகனங்களும் பொலிஸாரால் கையகப்படுத்தப்பட்டுள்ளதாக பிரதி பொலிஸ் மா அதிபர் மேலும் தெரிவித்துள்ளார்.

பொலிஸாரால் கையகப்படுத்தப்பட்டுள்ள வாகனங்களில் துவிச்சக்கர வண்டிகள், முச்சக்கர வண்டிகள், உந்துருளிகள் உள்ளிட்ட ஏனைய வாகனங்களும் உள்ளடங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

நேற்று நண்பகல் 12 மணி முதல் பிற்பகல் 6 மணிவரையிலான ஆறு மணித்தியால காலப்பகுதிக்குள் மாத்திரம் ஊரடங்கு உத்தரவினை மீறிய 111 பேர் கைது செய்யப்பட்டுள்ளதுடன் 19 வாகனங்களும் காவல் பொலிஸாரின் வசமாக்கப்பட்டுள்ளது.

Related posts: