கொரோனா வைரஸ் அச்சுறுத்தல்: இலங்கையில் மூன்றாவது நபரும் உயிரிழப்பு!

Thursday, April 2nd, 2020

இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டிருந்து நிலையில் மற்றும் ஒருவர் உயிரிழந்துள்ளார் என அறிவிக்கப்பட்டுள்ளது.

IDH மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 72 வயதான ஒருவரே கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட நிலையில் நேற்று இரவு உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொரோனா வைரஸ் காரணமாக இலங்கையில் பதிவான 3வது மரணம் இதுவாகும். உயிரிழந்தவர் கொழும்பு – மருதானையை சேர்ந்தவர் என தெரிவிக்கப்படுகின்றது.

இதேவேளை, இலங்கையில் இது வரையில், 146 பேர் கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளதோடு இருவர் உயிரிழந்த நிலையில் தற்போது 3 ஆவது மரணமும் பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அத்துடன், 21 பேர் பூரணமாக குணமடைந்து வீடு சென்றுள்ளனர். மேலும் 126 பேர் தொடர்ந்தும் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Related posts: