கொரோனா முடக்கத்தின் எதிரொலி: வங்கிகளில் தங்க நகை அடகு வைப்பு அதிகரித்துள்ளதாக மத்தியவங்கி தெரிவிப்பு!

இலங்கையில் தங்க நகை அடகு கடன் தொகை அதிகரித்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி அறிவித்துள்ளது.
அதன்படி, இந்த ஆண்டின் முதல் ஆறு மாத காலப் பகுதியில் சுமார் 643 பில்லியன் ரூபா தங்க நகை அடகுக் கடன் பெற்றுக் கொள்ளப்பட்டுள்ளதாக அறிக்கை ஒன்றில் குறிப்பிடப்பட்டுள்ளது.
வணிக வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்களிலிருந்து பொதுமக்கள் இவ்வாறு தங்க நகை அடகுக் கடன் பெற்றுக்கொண்டுள்ளனர்.
சில நிறுவனங்கள் ஒரு பவுண் நகைக்கு 57 ஆயிரம் ரூபா முதல் 60 ஆயிரம் ரூபா வரையில் வழங்கப்படுகின்றன. சில தனியார் நிறுவனங்கள் ஒரு பவுணுக்கு அடகுக் கடன் தொகையாக 65 ஆயிரம் ரூபா வரையில் வழங்குகின்றன.
அத்துடன் கடன் அட்டை பயன்படுத்துவோரில் 41 வீதமானவர்கள் முறையாக கடனை செலுத்தத் தவறியுள்ளதாக மத்திய வங்கி அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதுடன் கொவிட்-19 வைரஸ் பரவல் காரணமாக நாட்டு மக்கள் பெரும் நெருக்கடிகளை எதிர்நோக்கியுள்ளதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
|
|