ஒருசில அரச அதிகாரிகளது பக்கச்சார்பு நிலைமைகளால் வறிய மக்களுக்கான தெரிவுகள் புறந்தள்ளப்படுகிறது – ஈ.பி.டி.பியின் சாவகச்சேரி பிரதேச நிர்வாக பொறுப்பாளர் மெடிஸ்கோ குற்றச்சாட்டு!

Friday, January 22nd, 2021

தென்மராட்சி பிரதேசத்தின் அபிவிருத்தியும் அங்க வாழும் மக்களின் வாழ்வாதார மேம்பாடுகளும் குறுகிய இலாபங்கொண்ட அரசியல்வாதி ஒருவரது செயற்பாடுகளாலும் அவருக்கு ஒத்தூதும் அரச அதிகாரிகளது பாரபட்சங்களாலும் தட்டிப்பறிக்கப்பட்டு வருவதாக குற்றம் சாட்டியுள்ள ஈழ மக்கள் ஜனநாயகக கட்சியின் சாவகச்சேரி பிரதேச நிர்வாக செயலாளர் மெடிஸ்கோ விநாயகமூர்த்தி குறித்த தரப்பினரது இவ்வாறான அடாவடித்தனத்தை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் நேரடி தலையீடுகளூடாகவே ஈடுசெய்து வறிய மக்களுக்கு பெற்றுக் கொடுக்க முடிகின்றது என்றும் தெரிவித்துள்ளார்.

அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களின் முன்மொழிழவுகள் மற்றும் செயற்றிட்டங்களை தென்மராட்சி பிரதேச மக்களிடம் நடைமுறைப்படுத்தப்படுவது தொடர்பில் கேட்டபோதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இதன்போது அவர் மேலும் குறிப்பிடுகையில் –

தென்மராட்சி பிரதேசம் யாழ் மாவட்டத்தில் அதிகளவான கிராம சேவையாளர் பிரிவுகளை உள்ளடக்கியதாகவும் உள்ளதுடன் மக்களது பிரதானமான தொழிலாக விவசாயமும் காணப்படுகின்றது. அத்துடன் கடற்றொழில் பனைசார் உற்பத்தி தொழில் என இதர பல்துறை சார் தொழில் நடவடிக்கைகளை மக்கள் மேற்கொண்டாலும் அதிகளவானோர் மிகவும் பின்தங்கிய நிலையிலேயே உள்ளனர்.

யுத்தம் நடைபெற்ற காலப்பகுதியில் அதிகளவான பாதிப்புகளை எதிர்கொண்டிருந்த நிலையில் இப்பகுதி மக்களின் வாழ்வாதார மேம்பாடு மற்றும் அபிவிருத்தி உள்ளிட்ட விடயங்களில் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியினதும் அதன் செயலாளர் நாயகமும் அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தாவின் பங்களிப்பின் ஊடாகவே மேம்பாடு கண்டது..

குறிப்பாக கடந்த காலத்தில் இப்பிரதேசத்தின் அனைத்து மீள் குடியேற்றங்களையும் மேற்கொண்டிருந்த அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அழிந்து கிடந்த நகர்ப்குதி உள்ளிட்ட அனைத்தையும் துரித கதியில் தென்னிலங்கை அரசுகளுடன் இருந்த நல்லுறவை கொண்டு மேற்கொண்டு மக்களை இயல்பு நிலைக்கு திரும்ப வழிவகை செய்திருந்தார்.

அதேபோல வறிய மக்களின் வாழ்வாதார மேம்பாடு சுயதொழில் வாய்ப்புகளுக்கான உதவிகள், இலவச வீட்டுத்திட்டம், மின்சார வசதி, சிதைந்துகிடந்த பிரதான வீதிகள் மற்றும் உள்ளக வீதிகளின் அபிவிருத்தி கட்டுமாண பணிகள் என அனைத்திலும் தனது ஆதிக்கத்தை செலுத்தி மறுசீரமைத்து தருவதற்கு கரணமாக இருந்துள்ளார். ஆனால் இவை அனைத்தும் கடந்த நல்லாட்சி காலத்தில இப்பகுதி முற்றாக பறக்கணிக்கப்பட்டது

இந்நிலையில் தற்போது எமது தென்மராட்சி பிரதேசத்தினல் சுமார் 4 ஆயிரம் விடுகள் தேவையுடையோர் உள்ளனர். அதேபோல நிரந்தர காணிகளற்றவர்களாக 1500 குடும்பங்களும் ஆயிரம் குடும்பங்கள் மலசலகூடமற்ற நிலையிலும் காணப்படுகின்றனர். அத்துடன் சுமார் 1210 உள்ளக மற்றும் நடுத்தர வீதிகள் செப்பனிடப்படவேண்டிய நிலையும் காணப்படுகின்றது.

இவற்றை நிவர்த்தி செய்வதற்கு நாம் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா ஊடாக கோரிக்கைகளை முன்வைத்து தற்போது அவசிய தேவை கருதியதான முன்னுரிமை அடிப்படையில் வீட்டுத் திட்டங்ம் மலசல கூடவசதிகளை பெற்றுக்கொடுக்க நடவடிக்கை மேற்கொண்டுள்ளதுடன் குறிப்பிட்ட ஒரு தொகை பயனாளிகளுக்கு அது கிடைக்கப்பெற்று கட்டமாணங்களும் நடைபெற்று வருகின்றன.

அதேபோல உள்ளக வீதிகளும் அவசிய தேவைகருதியதான முன்னுரிமை அடிப்படையில் புனரமைப்பு மேற்கொள்ளப்படுகின்றது. இலவச மின்சார வசதி பெற்றுக்கொடுக்கப்பட்டு வருகின்றது.

இந்நிலையில் ஒருங்கிணைப்புக் குழு இணைத்தலைவரதும் அவரது செயற்பாட்டாளர்களதும் சுயவிருப்பு மற்றும் பாரபட்சமான நடவடிக்கைகளால் தென்மராட்சியில் பல திட்டங்கள் தவறானவர்களுக்கும் அவசியமற்றவர்களுக்கும் செல்லும் ஏதுநிலை உருவாக்கப்படுவதாகவும் இதனால் வறுமையிலுள்ள அவசிய தேவை உடைய மக்கள் பெரும் பாதிப்புகளை சந்தித்து வருகின்றனர் என்றும் சுட்டிக்காட்டியுள்ளனர்.

குறிப்பாக எமது பிரசே செயலகம் உள்ளிட்ட அரச திணைக்களங்களில் ஒருசில அரச அதிகாரிகள் ஒருங்கிணைப்பு குழு இணைத் தலைவரின் விசுவாசிகளாக இருந்து அவரை திருப்திப்படுத்தவதற்கான வேலைத்திட்டங்களை முன்னெடுப்பதால் மக்களின் தெரிவுகள் ஒவ்வொன்றும் மாற்றப்பட்டு சுயநலம் சார்ந்த அல்லது பழிவாங்கப்படும் தெரிவுகளாகவும் அமைவதுடன் வறிய மக்களின் நலன்கள் முற்றாக நிராகரிக்கப்படும் நிலையும் காணப்படுகின்றது.

அத்துடன் கடந்த நல்லாட்சியில் பெரும் மோசடிகளுடன் மேற்கொள்ளப்பட்ட கம்பரெலிய திட்டங்களுக்கு மறுபடியும் நிதி ஒதுக்கப்பட்டு அவர்களது ஊழல்களை மூடிமறைக்கும் செயலும் நடந்தேறி வருகின்றன என்றும் சுட்டிக்காட்டினார்.

அதேபோன்று தற்போது நடைபெற்ற ஒருங்கிணைப்பு குழு கூட்டத்திலும் பிரதேசத்தின் நலன் சார்ந்த எந்த விடயங்களும் ஆராயப்படுவதில்லை என்றும் தெரிவித்த மெடிஸ்கோ விநாயகமூர்த்தி ஒருங்கிணைப்பு குழு இணைத்த தலைவரது தலைமையில் நடைபெறும் கூட்டமானது ஒரு சனசமூநியைத்தில் நடைபெறும் கூட்டம் போன்று சிறுபிள்ளைத் தனமானதாக இருக்கின்றது என்றும் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் தற்போது அமைச்சர் டக்டளஸ் தேவானந்தா அர்கள் மத்தியில் அமைச்சராக இருப்பதனால் அவரது நேரடி தலையிடகளூடாகவே அரச அதிகாரிகளின் பாரபட்சங்கள் மற்றும் ஒருங்கிணைப்பு குழு செயற்பாட்டாளர்களின் அடாவடிகளை கட்டுப்படுத்தி இப்பகுதியின் அபிவிருத்தி பணிகள் மக்களின் வாழ்வாதார தேவைகளை அவசியம் கருதிய முன்னுரிமை அடிப்படையில் முன்னெடுக்க முடிகின்றது என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.

Related posts:

கால் நடைகளுக்கான தீவன உற்பத்திக்கான உபகரணங்கள் ஈ.பி.டி.பி.யின் வடக்கு மகாணசபை உறுப்பினர் தவநாதன் அவ...
தேசிய அடையாள அட்டை பெறவுள்ளோருக்கு தொடர்பில் ஆட்பதிவு திணைக்களம் விடுத்துள்ள அறிவுறுத்தல்!
எதிர்வரும் 21ஆம்முதல் வடமாகாண மாணவர்களுக்கு பைசர் தடுப்பூசி வழங்க ஏற்பாடு – தவறாது பெற்றுக்கொள்ளுமாற...