கொரோனா தொற்றை விட விபத்தில் உயிரிழப்போரே அதிகம் – அமைச்சர் சமல் ராஜபக்ஷ வருத்தம்!

Saturday, November 21st, 2020

தினமும் வீதி விபத்துக்களினால் குறைந்தது எட்டுமுதல் ஒன்பது பேர் வரை உயிழப்பதாக உள்நாட்டு பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் சமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றில் பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் சாந்த பண்டார எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த அவர், முறையே 2018 ஆம் ஆண்டில் 3,151 இறப்புகளும் 2019 ஆம் ஆண்டில் 2,889 மரணங்களும் பதிவாகியுள்ளதாக கூறினார்.

அதிவேகமாக, குடிபோதையில் வாகனம் ஓட்டுதல், வீதியில் சமிக்ஞைகளை பின்பற்றாமை போன்றவை விபத்துக்களில் இறப்பதற்கு முக்கிய காரணங்கள் என பொலிஸார் தெரிவித்துள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார். கொரோனா தொற்றினால் ஏற்படும் உயிரிழப்புக்கள் மற்றும் போரினால் ஏற்பட்ட உயிரிழப்புபுக்களை விட விபத்துக்களால் தற்போது ஏற்படும் இறப்புகளின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது என்றும் அமைச்சர் சமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது

Related posts: