கொரோனா தொற்று அச்சத்தில் யாழ்ப்பாணம் : பரிசோதனைகளை விரிவுபடுத்த அதிரடி நடவடிக்கை!

Thursday, April 2nd, 2020

இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளோரின் எண்ணிக்கை தற்போது 148 ஆக அதிகரித்துள்ளது.

யாழ்ப்பாணம், குருணாகல் மற்றும் கொழும்பு – மருதானை ஆகிய பகுதிகளில் புதிதாக ஐந்து தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டதையடுத்து இந்த எண்ணிக்கை இவ்வாறு உயர்ந்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் விஷேட வைத்திய நிபுணர் அனில் ஜாசிங்க தெரிவித்தார்.

இந்த 148 பேரில் மூவர் உயிரிழந்துள்ளதுடன், சீன பெண் ஒருவர் உள்ளிட்ட 21 பேர் குணமடைந்து வைத்தியசாலைகளை விட்டு வெளியேறியுள்ளனர். இந்நிலையில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட 123 பேர் தொடர்ந்து வைத்தியசாலைகளில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.

நேற்று அடையாளம் காணப்பட்ட தொற்றாளர்களில், யாழ்ப்பாணத்தில் அடையாளம் காணப்பட்டவர் மதபோதகர் ஒருவரும் என தெரியவந்துள்ளது. மேலும் அரியாலை பகுதியில் சுவிஸ் நாட்டிலிருந்து வருகை தந்து மத போதனை மேற்கொண்ட போதகர் ஒருவருடன் தொடர்புகளை பேணிய மத போதகர் ஒருவரும் அந்த நிகழ்வில் கலந்துகொண்ட மேலும்இருவருமாகமூவர் நேற்று கொரோனா தொற்று குறித்து அடையாளம் காணப்பட்டுள்ளனர்.. அத்துடன் இந்த நோய் பரவும் அபாயம் உள்ளதாக காரணம் கூறி இலங்கையில் முடக்கப்பட்ட முதல் ஊர் யாழ். அரியாலை பிரதேசமாகும்.

கடந்த மார்ச் 21 ஆம் திகதி அந்த ஊர் முடக்கப்பட்டது. இந்நிலையில் அந்த ஊர் இன்னும் மூன்று நாட்களுக்கு முற்றாக முடக்கப்பட்டிருக்கும் என அறிய முடிகின்றது. அந்த மூன்று நாட்களின் பின்னர் அந்த ஊர் சாதாரண ஊரடங்கு நிலைமையின் கீழ் கொண்டுவரப்படக் கூடிய சாத்தியங்கள் இருந்த நிலையிலேயே யாழ்ப்பாணத்தில் மேலும் 3 கொரோனா தொற்றாளர் கண்டுபிடிக்கப்பட்டுள்ளனர்.

கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட ஒருவருக்கு அது குறித்த அடையாளங்கள் தனிமைப்படுத்தலின் இறுதி நான்கு நாட்களில் பெரும்பாலும் காட்டும் என சுகாதார துறையினர் தெரிவிக்கும் நிலையில், தற்போது 14 நாட்கள் முடக்கப்பட்ட அரியாலை பகுதியின் இறுதி நாட்கள் நகர்ந்து வருகின்றன.

இந்நிலையில் யாழ்ப்பாணத்துக்கு தொடர்ந்து மறுஅறிவித்தல் வரை ஊரடங்கு அமுல் செய்யப்பட்டுள்ள சூழலிலேயே மேலும் மூன்று தொற்றாளர், அரியாலை மத நிகவுகளை மையப்படுத்திய தொடர்பின் பின்னணியில் அடையாளம் காணப்பட்டுள்ளமை முக்கியத்துவம் பெறுகின்றது.

குறித்த அரியாலை பகுதியில் கொதோனா தொற்றுக்குள்ளான போதகர் ஒருவரால் நடாத்தப்பட்ட நிகழ்வை மையப்படுத்தி, அப்பகுதியில் கொரோனா பரவுவதை தடுப்பதை நோக்காக கொண்டு அந்த ஊர் முடக்கப்பட்டதாக யாழ். பிரதிப் பொலிஸ் மா அதிபர் மகேஷ் சேனநாயக்க முன்னர் கூறியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related posts: