கொரோனா தொடர்பில் அறிவிக்க விசேட தொலைபேசி இலக்கம் !

Monday, May 3rd, 2021

கொரோனா தொடர்பில் அறிவிக்க புதிய தொலைபேசி இலக்கமொன்று அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாக இராணுவ தளபதி ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

கொரோனா தொற்றாளர்கள் என அடையாளம் காணப்பட்டு, சிகிச்சை நிலையங்களுக்கு அழைத்து செல்ல தாமதமாகும் பட்சத்தில், குறித்த தொலைபேசி இலக்கத்திற்கு அறிவிக்கமுடியும் எனவும் இராணுவ தளபதி தெரிவித்துள்ளார்.

அதன்படி, 1906 என்ற தொலைபேசி இலக்கத்துடன் தொடர்புக்கொண்டு, கொவிட் தொற்றாளர்கள் தொடர்பான அவசர தகவல்களை அறிவிக்க முடியும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

Related posts: