கொரோனா சிகிச்சைகளுக்காக தாய்லாந்திடமிருந்து இலங்கைக்கு மருத்துவ உபகரணங்கள் நன்கொடை!

Thursday, September 2nd, 2021

இலங்கையில் கொவிட் நோயாளர்களுக்கு சிகிச்சை அளிக்கும் வைத்தியசாலைகளுக்கு பகிர்ந்தளிப்பதற்காக தாய்லாந்தினால் மருத்துவ உபகரணங்கள் நன்கொடையாக வழங்கப்பட்டுள்ளன.

30 பிராணவாயு செறிவூட்டிகள், இரண்டு வென்டிலேட்டர்கள், 108 பிராணவாயு தாங்கிகள் மற்றும் 160 ஒக்சிமீட்டர்கள் உள்ளிட்ட உபகரணங்கள் வழங்கப்பட்டுள்ளதாக வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.

தாய்லாந்து வெளிவிவகார அமைச்சு, தாய்லாந்தின் இலங்கை சங்கம், தாய் – ஸ்ரீலங்கா வர்த்தக சபை மற்றும் கொழும்பிலுள்ள தாய்லாந்து தூதரகம் என்பன இணைந்து இந்த மருத்துவ உபகரணங்களை இலங்கைக்கு நன்கொடையாக வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

000

Related posts:


படகில் தினமும் சென்று பரீட்சை எழுதும் அவலம் - எழுவைதீவில் பரீட்சை மண்டபம் அமைத்துத் தருமாறு கோரிக்கை...
எரிபொருட்களிற்காக வரிசையில் நிற்கவேண்டியதில்லை - அடுத்த சில வாரங்களில் மூன்று கப்பல்கள் வரவுள்ளன - அ...
ரூபாவின் பெறுமதி வலுப்பெற்ற போதிலும் பொருட்களின் விலை குறைவடையவில்லை - இலங்கை சிற்றுண்டிச்சாலைகள் உர...