கொரோனா கொத்தணியை ஒழிக்க குறைந்தது இரண்டு மாதங்கள் தேவை – பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர் தெரிவிப்பு!
![](http://www.epdpnews.com/wp-content/uploads/2020/11/download.png)
நாட்டிலிருந்து கொரோனா கொத்தணியை ஒழிக்க குறைந்தது இரண்டு மாதங்கள் தேவைப்படும் என்று சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
அத்துடன் தற்போது அடையாளம் காணப்பட்ட நோயாளிகளில் பெரும்பானவர்கள் சமூகத்தில் சுறுசுறுப்பாக செயல்படும் இளம் மற்றும் ஆரோக்கியமான நபர்கள் என பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர், விசேட வைத்திய நிபுணர் ஹேமந்த ஹேரத் தெரிவித்துள்ளார்.
நோய்வாய்ப்பட்டவர்கள், முதியவர்கள், சிறுவர்கள் மற்றும் குழந்தைகள் பெற்றுக் கொள்ளவுள்ள தாய்மார்களுக்கு வைரஸ் பாதிப்பு ஏற்பட்டால் அதிக சிக்கல்களை சந்திக்க நேரிடும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
தற்போது புதிய நோயாளிகளின் எண்ணிக்கை கடந்த சில நாட்களில் கண்டறியப்பட்ட தொற்றுநோய்களுடன் ஒப்பிடுகையில் குறைவாக உள்ளது என்றும் ஹேமந்த ஹேரத் சுட்டிக்காட்டியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
000
Related posts:
பொன்சேகா உள்ளே- விஜயதாச வெளியே!
எரிபொருள் பவுசர் உரிமையாளர்கள் பணிப்புறக்கணிப்பு?
யால தேசிய பூங்கா மூடப்பட்டது!
|
|