கொரோனா அச்சுறுத்தலுக்கு மத்தியில் பாடசாலைகளை விரைவாக ஆரம்பிக்கும் நிலை இல்லை – கல்வி அமைச்சர் தெரிவிப்பு!

Thursday, June 24th, 2021

தற்போதைய கொரோனா தொற்று அச்சுறுத்தலுக்கு மத்தியில்,மாணவர்களின் உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தும் வகையில் பாடசாலைகளை விரைவாக ஆரம்பிக்கும் திட்டம் எதுவும் இல்லை என கல்வி அமைச்சர் ஜி.எல் பீரிஸ் தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் உரையாற்றியபோதே கல்வி அமைச்சர் இவ்வாறு  தெரிவித்துள்ளார்.

மேலும் மருத்துவத்துறை விசேட நிபுணர்களின் ஆலோசனைப்படி பாடசாலைகளை மீளத்திறப்பதற்குரிய திகதி தீர்மானிக்கப்படும் என்றும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.

அத்துடன் தற்போதைய கொவிட் தொற்று அச்சுறுத்தல் இலங்கைக்கு மாத்திரம் விசேடமான ஒன்றல்ல. உலக நாடுகளில் பல இதற்கு தீர்வை காண்பதில் ஈடுபட்டிருப்பதாகவும் அமைச்சர் மேலும் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related posts:


எல்.என்.ஜி மின் உற்பத்தி நிலையத்திலிருந்து மின்சாரத்தை கொள்வனவு செய்வதற்கு இலங்கை மின்சார சபைக்கு அன...
யாருடைய நம்பிக்கையையும் உடைய இடமளிக்க மாட்டேன் - முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ அதிரடி அறிவிப்பு!
மருந்துப் பொருட்கள் உட்பட அத்தியாவசிய பொருட்களை கொள்வனவு செய்வதற்கு நிதியமைச்சின் முழுமையான அனுமதியை...