கொரோனாவை கட்டுப்படுத்துவது தொடர்பில் மருத்துவ நிபுணர்களுடன் ஜனாதிபதி சந்திப்பு!
Friday, April 10th, 2020கொரோனா வைரஸை எவ்வாறு கட்டுப்படுத்துவது தொடர்பாக ஜனாதிபதிக்கும் மருத்துவ நிபுணர்களுக்கும் இடையில் ஜனாதிபதி செயலகத்தில் கலந்துரையாடல் இடம்பெற்றது.
இதன்போது இதுவரை கொரோனா வைரஸை கட்டுப்படுத்த அரசாங்கம், பாதுகாப்புப்படையினர், சுகாதார பணியாளர்கள் மேற்கொண்ட நடவடிக்கைகள் மற்றும் எதிர்காலத்தில் மேற்கொள்ளவேண்டிய நடவடிக்கைகள் குறித்து விரிவாக ஆராயப்பட்டது.
கொரோனா வைரஸ் தொற்றாளர்களுடன் தொடர்புகளை வைத்திருந்த குழுக்கள் தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்வது அவசியமானது என்று நிபுணர்கள் இதன்போது சுட்டிக்காட்டினர்
அத்துடன் சிறுவர்கள் தொடர்பில் தற்போது பரிசோதனைகள் மேற்கொள்ளப்படுகின்றன. இந்தநிலையில் எந்த சூழ்நிலைக்கும் முகங்கொடுக்க அந்த பரிசோதனைகள் அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்படவேண்டும் என்று ஜனாதிபதி இதன்போது உத்தரவிட்டார்
இதேவேளை தனிமைப்படுத்தல் நடவடிக்கைகளை மேலும் வலுப்படுத்தப்படவேண்டும் என்று நிகழ்வில் பங்கேற்ற மருத்துவ அதிகாரிகள் வலியுறுத்தினர்.
கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ள இடங்களில் இருந்தவர்கள் ஏனைய பகுதிகளுக்கு செல்வது தடுக்கப்படவேண்டும் என்றும் மருத்துவர்கள் கோரிக்கை விடுத்தனர். இதற்கிடையில் உரிய ஆராய்ச்சிகள் நிபுணத்துவ தரத்தில் முன்னெடுக்கப்படவேண்டும் என்ற கருத்தும் இங்கு கலந்துரையாடப்பட்டது.
இறுதியில் புகைத்தலில் இருந்து விலகியிருப்பது மற்றும் தொண்டை ஈரலிப்பை தக்கவைத்துக்கொள்ள நீராகாரங்களை அருந்தவேண்டும் போன்றவற்றின் அவசியத்தை மருத்துவர்கள் வலியுறுத்தினர்.
Related posts:
|
|