கைதிகளின் மரண தண்டனையை ஆயுள் தண்டனையாக்க பரிந்துரை!

Saturday, April 8th, 2017

மரண தண்டனைக் கைதிகளின் தண்டனையை, ஆயுள் தண்டனை வரை குறைக்குமாறு நாடாளுமன்றத்திற்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

சிறைச்சாலைகளில் நிலவும் இட நெருக்கடி மற்றும் சிறைச்சாலைகள் மறுசீரமைப்புத் தொடர்பிலான நீதிமன்ற நடவடிக்கை மற்றும் சட்டக் காரணங்களை தேடியறியும் சிறப்புப் படையணியால் தாக்கல் செய்யப்பட்டுள்ள 1ஆவது அறிக்கையிலேயே மேற்கண்டவாறு பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

அந்த அறிக்கை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளவை வருமாறு,

சிறைச்சாலைகளில் நெருக்கடியைக் குறைப்பதற்காக, கைதிகளை சிறைகளில் தடுத்து வைப்பதற்குப் பதிலாகவும் தண்டப்பணம் செலுத்த முடியாதவர்களைச் சிறைகளில் தடுத்து வைப்பதற்குப் பதிலாகவும் மாற்று ஏற்பாடுகள் பல பரிந்துரைக்கப்பட்டுள்ளன. குற்றவாளிகள் அல்லாத நபர்கள் 9 அயிரத்து 552பேர் சிறைச்சாலைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். இது கைதிகளின் முழு எண்ணிக்கையுடன் ஒப்பிடும்போது 52 சதவீதம் தற்போதுள்ள சட்டத்தின் பிரகாரம், ஆயுள் தண்டனைக் கைதிகளின் தண்டனையும் குறைக்க முடியும் என்றும் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. இதுவரையிலும் மரண தண்டனை விதித்த தீர்ப்பளிக்கப்பட்டுள்ள கைதிகளின் எண்ணிக்கை 1,082 ஆகும். அவர்களில் 726 பேர் மேன் முறையீடு செய்துள்ளனர். ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ள கைதிகளின் முழு எண்ணிக்கை 555 ஆகும். அதில் 463 பேர் மேன்முறையீடு செய்துள்ளனர் என்றுள்ளது,

Related posts: