கூட்டெரு இறக்குமதிக்கு மட்டுமே தற்காலிகமாக தடை – அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே அறிவிப்பு!

Friday, June 25th, 2021

இலங்கைக்கு கூட்டெருவை இறக்குமதி செய்வதற்கு மாத்திரமே தற்காலிகமாக தடை விதிக்கப்பட்டிருப்பதாக விவசாயத்துறை அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே தெரிவித்துள்ளார்.

எனினும் சேதன பசளை இறக்குமதிக்கு தடையேதும் இல்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

சேதன பசளை இறக்குமதியைத் தற்காலிகமாக இடைநிறுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக விவசாய திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகத்தை மேற்கோள் காட்டி தகவல் வெளியிடப்பட்டிருந்தது.

எவ்வாறாயினும் ஊடகங்களுக்கு தெளிவுப்படுத்திய அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே, சேதன பசளை இறக்குமதிக்கு தடை விதிக்கப்படவில்லை என தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: