கூட்டுத் திட்டங்களின் மூலம் இலங்கைக்கு மேம்படுத்தப்பட்ட உதவி வழங்கப்படும் – USAID துணை நிர்வாகி – வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி சந்திபின்போது உறுதியளிப்பு!

Tuesday, September 20th, 2022

ஐக்கிய இராச்சியத்தின் சர்வதேச அபிவிருத்திக்கான முகவரவமைப்பின் (USAID) துணை நிர்வாகி ஐசோபெல் கோல்மேன், நேற்று நியூயோர்க்கிலுள்ள வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரியை சந்தித்துள்ளார்.

USAID நிர்வாகி சமந்தா பவரின் விஜயத்தின் தொடர்ச்சியாக, அமைச்சர் அலி சப்ரி மற்றும் துணை நிருவாகி இஸபெல் கோல்மன் ஆகியோர், நியூயோர்க்கில் உள்ள ஐக்கிய நாடுகளுக்கான இலங்கையின் நிரந்தர தூதரகத்தின்படி, கூட்டுத் திட்டங்களின் மூலம் இலங்கைக்கு மேம்படுத்தப்பட்ட உதவிகள் குறித்து கலந்துரையாடியுள்ளனர்.

சமந்தா பவர் இந்த மாத தொடக்கத்தில் இலங்கைக்கு விஜயம் செய்து ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மற்றும் பல தரப்பினருடன் நாட்டிற்கான அமெரிக்க உதவிகள் மற்றும் USAID திட்டங்கள் குறித்து கலந்துரையாடினார்.

தனது இலங்கை விஜயத்தின் போது, USAID நிர்வாகி சமந்தா பவர் மேலும் 60 மில்லியன் டொலர் உதவியை வழங்க உறுதியளித்திருந்திந்தமை குறிப்பிடத்தக்கது,.

000

Related posts: