கூட்டமைப்பிற்கு வாக்களித்து ஏமாந்ததை விட கிடைத்த பலன் என்ன? – ஈ.பி.டி.பியின் வேட்பாளர் ஶ்ரீரங்கேஸ்வரன்!

Monday, July 13th, 2020

வீட்டிற்கு வாக்குப் போட்டதனால் கிடைத்த பலன், வெற்றி பெற்றவர்களின் பிள்ளைகளுக்கு கைநிறைய சம்பளத்துடன் உயர் பதவிகள் பெற்றுக் கொண்டதை  தவிர வேறு ஏதுமில்லை என ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் யாழ். மாவட்ட உதவி நிர்வாக செயலாளரும் நடைபெறவுள்ள நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடும் வேட்பாளருமான ஸ்ரீரங்கேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

தென்மாராட்சி பிரதேச இளைஞரணியினால் இன்று ஏற்பாடு செய்யப்பட்ட மாநாட்டில் கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இதனைத் தெரிவித்தார்.

இதுதொடர்பில் மேலும் தெரிவிக்கையில்,

எமது மக்கள் நீண்டகாலமாக தமிழ்  தேசியக் கூட்டமைப்பினரால் ஏமாற்றப்படும் இனமாகவே இருந்து வருகின்றது. ஆனாலும் அது தொடர்பில் மக்கள் ஒருதடவை கூட இதுவரை சிந்தித்தது கிடையாது என்றே எண்ணத் தோன்றுகின்றது.

இன்று எமது மக்களிடையே பல்வேறு பிரச்சினைகளும் தேவைப்பாடுகளும் நிறைந்து காணப்படுகின்றது. ஆனால் அவற்றையெல்லாம் மக்களின் வாக்குகளை அபகரிக்கும் கூட்டமைப்பினர் கண்டுகொள்வது கிடையாது.

இவற்றுக்கெல்லாம் தீர்வுகண்டு கொடுப்பதற்கான வேலைத்திட்டங்களை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தனக்கு கிடைத்த சிறிய அரசியல் பலத்தினூடாக செய்து காட்டியிருந்தார்.

அதை முழுமையடைய செய்வதற்கு எமக்கு இதுவரை அதிகளவான அரசியல் பலம் கிடைக்கவில்லை. ஆனால் இம்முறை மக்களிடம் மாற்றம் ஏற்பட்டுள்ளதை அவதானிக்க முடிகின்றது.

இந்த மாற்றம் எமது கரங்களுக்கு இம்முறை கிடைக்குமானால் வரவுள்ள அடுத்து 5 வருட காலத்திற்குள் தமிழ் மக்களின் அபிலாஷைகளுக்கு முடியுமானளவு தீர்வுகண்டு கொடுப்போம் என்றார்.

Related posts: