குழாய்க் கிணறு அமைப்போர் நீர்வளச் சபையில் அவசியம் பதிவும் செய்திருத்தல் வேண்டும்!

Wednesday, March 21st, 2018

குழாய்க் கிணறுகள் அமைக்கும் தொழிலில் ஈடுபடும் சகலரும் துளையிடும் செயற்பாடுகளை ஆரம்பிப்பதற்கு முன்னர் நீர்வளச் சபையில் பதிவுசெய்து அதற்கான அனுமதியைப் பெறவேண்டும் என நீர்பாசன மற்றும் நீர் வளங்கள் முகாமைத்துவ அமைச்சர் காமினி விஜிதமுனி சொய்சா அறிவித்துள்ளார்.

நீர்வளங்கள் சபையின் 1964 ஆம் ஆண்டின் 29 ஆம் இலக்க சட்டத்தின் 12(1) பிரிவின் கீழ் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

அரச அல்லது உள்ளுராட்சி அரச சார்பற்ற அமைப்பு அல்லது தனிநபர் ஒருவரினால் இயற்கை நீர்ஊற்று அல்லது நிலத்தடி நீரைப் பயன்படுத்துவதாக இருந்தால் முறைப்படி அனுமதி பெற வேண்டும்.

குழாய்க் கிணறு அமைப்பதற்கு நீர் வழங்கல் சபையின் அனுமதி பெற்றுக்கொள்ளப்பட வேண்டும்.

அவர்களது ஆலோசனைகளுக்கேற்ப செயற்பட வேண்டும். சூழலுக்குப் பாதிப்பு ஏற்படாத வகையில் அதில் பெற்றுக் கொள்ளக்கூடிய நீர்மட்டத்தை சரியான முறையில் அளவீடு செய்து நீர் வளங்கள் சபையின் மேற்பார்வையின் கீழ் குறித்த அனுமதியைப் பெற்றுக்கொள்ளுதல் வேண்டும் என்று அமைச்சர் விடுத்துள்ள அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts: