குறைந்த விலையில் அரிசியை கொள்வனவு செய்யும் வாய்ப்பு!

வரவுள்ள பண்டிகைக் காலத்தில் குறைந்த விலையில் அரிசியை கொள்வனவு செய்வதற்கான வாய்ப்பு நுகர்வோருக்கு கிடைக்கும் என்று கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சர் ரிசாத் பதியூதீன் தெரிவித்துள்ளார்.
கடந்த மாதம் இந்தியாவிலிருந்து தருவிக்கப்பட்ட நாட்டரிசி இலங்கைக்கு கிடைத்திருக்கிறது. சதொச, கூட்டுறவு விற்பனை நிலையங்கள் ஊடாக இதனை பெற்றுக்கொள்ள முடியும். இந்தியாவிலிருந்து 53 ஆயிரம் மெற்றிக் தொன் அரிசி எதிர்வரும் நவம்பர் மாதம் இரண்டாவது வாரத்தில் இலங்கையை வந்தடையும் என்றும் அமைச்சர் குறிப்பிட்டார்.மேலும், ஒரு கிலோ நாட்டரிசி 74 ரூபாவுக்கு விற்பனை செய்யப்படும் என்றும் அமைச்சர் சுட்டிக்காட்டினார்
Related posts:
வெலிக்கடை சிறைச்சாலையில் மனநலம் குன்றிய ஒருவர் கொலை !
எதிர்வரும் திங்கள்முதல் நகரங்களுக்கு இடையிலான கடுகதி புகையிரத சேவைகள் ஆரம்பிக்கப்படும் - திணைக்களத்த...
எதிர்வரும் திங்கள்முதல் மின்வெட்டு அமுலாகும் காலப்பகுதியில் மாற்றம் - பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவி...
|
|