குறைந்த வருமானம் கொண்ட நாடுகளுக்கு தடுப்பூசிகளை நன்கொடையாக வழங்க வேண்டும் முன்வாருங்கள் – செல்வந்த நாடுகளிடம் உலக சுகாதார ஸ்தாபனம் கோரிக்கை!

செல்வந்த நாடுகள், குழந்தைகள் மற்றும் சிறுவர்களுக்கு கொரோனா தடுப்பூசிகளை வழங்கும் திட்டங்களை பிற்போட்டு, அதற்குப் பதிலாக குறைந்த வருமானம் கொண்ட நாடுகளுக்கு தடுப்பூசிகளை நன்கொடையாக வழங்க வேண்டும் என உலக சுகாதார ஸ்தாபனம் வலியுறுத்தியுள்ளது.
ஜெனிவாவில் இடம்பெற்ற இணையகாணொளி ஊடான மாநாட்டில், உலக சுகாதார ஸ்தாபனத்தின் தலைவர் டெட்ரொஸ் அதனம் கெப்ரியேஸஸ் இந்த விடயத்தை வலியுறுத்தியுள்ளார்.
அத்துடன் உலகளாவிய நியாயமான அணுகல் திட்டமான கொவெக்ஸ் திட்டத்திற்கு, அதிகமான தடுப்பூசிகளை வழங்குமாறும் உலக நாடுகளை அவர் வலியுறுத்தியுள்ளார்.
அமெரிக்கா, கனடா உள்ளிட்ட நாடுகள், 12 முதல் 15 வயதுடைய சிறுவர்களுக்கு கொரோனா தடுப்பூசியை செலுத்துவதற்கான நடவடிக்கையை மேற்கொள்ள உள்ளதாக அறிவித்துள்ளன. ஆனால் தற்போது கொரோனா தடுப்பூசிகளின் சர்வதேச விநியோகமானது மிகவும் சீரற்ற நிலையில் உள்ளது.
முதல் தடுப்பூசி, கடந்த டிசம்பர் மாதம் அனுமதிக்கப்பட்டதுமுதல், செல்வந்த நாடுகள் பெருமளவான விநியோகங்களைப் பெற்றுள்ளன.
பல நாடுகள், தங்கள் மக்கள் தொகையில் இயலுமான அளவிலான தரப்பினருக்கு தடுப்பூசி செலுத்துவதற்கான நடவடிக்கையில் போட்டித் தன்மையுடன் உள்ளதாகவும் உலக சுகாதார ஸ்தாபனத்தின் தலைவர் டெட்ரொஸ் அதனம் கெப்ரியேஸஸ் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
|
|