குறைந்த வயதிலேயே ஜெயலலிதா மறைந்து விட்டார்: கருணாநிதி இரங்கல்!

Tuesday, December 6th, 2016

மறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதாவிற்கு பல தமிழக அரசியல் கட்சித் தலைவர்களும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

“குறைந்த வயதிலேயே மறைந்து விட்டார். எனினும் அவருடைய புகழ் என்றென்றும் நிலைத்திருக்கும் என்பதில் சந்தேகமில்லை.

கட்சிகளை பொறுத்து எத்தனையோ கருத்து வேறுபாடுகள் இருந்த போதும் முதலமைச்சர் ஜெயல்லிதா அவரது கட்சியின் நலன்களுக்கு துணிச்சலோடு காரியங்களை ஆற்றியவர்” என திமுக தலைவர் கருணாநிதி தனது டிவிட்டர் வலைதளத்தில் இரங்கல் தெரிவித்துள்ளார்.

_92845956_karunatwitter

“ஜெயலலிதா ஒரு தைரியமான தலைவர் அவரின் இழப்பு ஈடு செய்யமுடியாதது” என தமிழக சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் டிவிட்டர் வலைதளத்தில் தெரிவித்துள்ளார்.

_92845958_stalin1

“ஜெயலலிதாவின் மறைவு சொல்லொணாத் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது; அவரது ஆன்மா சாந்தி அடைய இறைவனை பிரார்த்திக்கிறேன்” என தேமுதிக தலைவர் விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.

ஒரு துணிச்சல் மிக்க மற்றும் ஒரு மனிதாபிமான தலைவரை மரணம் கொண்டு சென்றிருப்பதை மனம் ஏற்க மறுக்கிறது; அம்மா என்று அழைக்கப்பட்ட அந்த தாய் உள்ளம் இன்று இல்லை என்பதை ஒப்புக் கொள்ள மனம் மறுக்கிறது என பாரதிய ஜனதா கட்சியின் தமிழகத் தலைவர் தமிழிசை தெரிவித்துள்ளார்.

எந்த பின்புலமும் இல்லாமல் அரசியலுக்கு வந்து வியக்கத்தக்க வெற்றிகளை குவித்தவர் ஜெயலலிதா. ஆணாதிக்கம் நிறைந்த தமிழக அரசியல் பெண்களால் சாதனைகளை படைக்க முடியும் என்பதற்கு உதாரணமாய் திகழ்ந்தவர் ஜெயலலிதா என பாட்டாளி மக்கள் கட்சியின் இளைஞர் அணி தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

Related posts: