குறைநிரப்பு பிரேரணை அரசாங்கத்தால் சமர்ப்பிப்பு!
Friday, September 9th, 20164161கோடியே 47இலட்சத்து 23527 ரூபாவுக்கான குறைநிரப்பு பிரேரணையை அரசாங்கம் நாடாளுமன்றத்தில் சமர்ப்பித்துள்ளது.
நாடாளுமன்றத்தில் இன்று 2016ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில் ஒதுக்கப்பட்ட நிதிக்கு மேலதிகமாக சமர்ப்பிக்கப்பட்டுள்ள இப்பிரேரணையில், பாதுகாப்பு அமைச்சுடன் தொடர்புடைய முப்படைகளுக்கும் 165கோடியே 3 067 000 ரூபாவும், சட்டம் ஒழுங்கு மற்றும் தென்மாகாண அபிவிருத்தி அமைச்சுக்கு ஒருகோடியே 350 000 ரூபாவும் ஒதுக்கப்பட்டுள்ளது.
அமைச்சர்கள், திணைக்களங்களின் வாகன கொள்வனவுக்காக 20 கோடியே 40 இலட்சத்து 87 750 ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது. மீள்குடியேற்றத்தை துரிதப்படுத்துவதற்காக 100கோடி ரூபாவும் ஒதுக்கப்பட்டுள்ளது.
ஜனாதிபதி செயலகத்துக்காக 32கோடியே 33இலட்சத்து 320 000 ரூபாவும் பிரதமர் அலுவலகத்திற்காக 12கோடியே 36 இலட்சத்து 27 418 ரூபாவும் ஒதுக்கப்பட்டுள்ளதோடு மிகுதி ஏனைய அமைச்சுகள், திணைக்களங்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
Related posts:
|
|