குப்பைகளை அகற்ற விஞ்ஞான ரீதியான முறைமை – கார்தினல் மெல்கம் ரஞ்சித்

Thursday, July 6th, 2017

“நல்லாட்சி அரசாங்கத்தில் இணைந்துள்ள இரண்டு பிரதான கட்சிகளினதும் தொழிற்சங்கங்களுக்கு இடையில் பிரச்சினை ஏற்படக்கூடும்” என, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்

ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் தலைமையக கட்டடத்தில் அமைக்கப்பட்டுள்ள, ஸ்ரீலங்கா சுதந்திர அரச சேவையாளர்கள் சங்கத்தின் புதிய காரியலய திறப்பு விழாவில் கலந்துகொண்ட ஜனாதிபதி, நேற்று இதனை குறிப்பிட்டார்

இதற்கிடையில், அலரி மாளிகையில் நேற்று இடம்பெற்ற, குறைந்த வருமானத்தை பெறும் குடும்பங்களின் சிறுவர்களுக்கான புலமை பரிசில் வழங்கும் நிகழ்விலும் ஜனாதிபதி பங்குகொண்டார்.

கல்வி நாட்டின் எதிர்காலத்திற்கு மிகவும் அத்தியாவசியமானது என ஜனாதிபதி இதன்போது குறிப்பிட்டுள்ளார்.

“கல்வியின் மூலம் சமூகத்திற்கு முழுமையான மனிதர்கள் உருவாக்கப்படுவதுடன் நாட்டையும் விரைவாக அபிவிருத்தி செய்யவும் முடியும்.

அதுபோல நாட்டின் பிள்ளைகளின் கல்வியின் பொருட்டு அனைவரும் மேற்கொள்ளும் முதலீடு மற்றும் அர்ப்பணிப்பு நாட்டின் எதிர்காலத்தின் பொருட்டு மேற்கொள்ளப்படும் மிகச்சிறந்த அடித்தளம்” எனவும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இதன்போது தெரிவித்துள்ளார்.

Related posts: