குடிவரவு குடியகல்வு சட்டத்தை மீறிய 13 வெளிநாட்டவர்கள் கைது!
Monday, April 29th, 2019பல்வேறு பகுதிகளில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்புகளில் குடிவரவு குடியகல்வு சட்டத்தை மீறி நாட்டில் தங்கியிருந்த குற்றச்சாட்டில் , 13 வெளிநாட்டு பிரஜைகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
நவகமுவ கொத்தலாவல பகுதியில் வீசா இன்றி நாட்டில் தங்கியிருந்த ஈராக் நாட்டு பிரஜையொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இதேவேளை, கல்கிஸ்ஸ பகுதியில் பொலிஸாருக்கு கிடைத்த தகவலுக்கு அமைய 6 நைஜீரியா பிரஜைகள் கைது செய்யப்பட்டுள்ளனர். வெலிகட புத்கமுவ வீதியிலும் 4 நைஜீரியாவை பிரஜைகள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இந்நிலையில் இரத்மலானையில் முன்னெடுக்கப்பட்ட சோதனை நடவடிக்கையில், 20 வயதாக இந்திய பிரஜையொவருவர் கைது செய்யப்பட்டுளளார்.
தெஹிவளையில் தாய்லாந்தை சேர்ந்த 38 வயதான பெண்ணொருவரும் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
Related posts:
மாணவர்கள் மரணத்தைக் கண்டித்து யாழ். மாவட்டச் செயலகம் முற்றுகை!
பேச்சுக்கள் தோல்வியில் முடிந்தால் ஜனாதிபதி தேர்தலில் மைத்திரிபால சிறிசேனவும் போட்டியாம்!
தேசிய பொருளாதாரத்திற்கு பங்களிப்பை வழங்கக்கூடிய வகையில் வடக்கு மாகாணம் அபிவிருத்தி செய்யப்படும் - ஜன...
|
|