குடாநாட்டில் மரவள்ளிக்கு பெரும் கிராக்கி!

Monday, March 18th, 2019

யாழ். குடா நாட்டில் மரவள்ளிக் கிழங்கிற்கு தற்போது பெரும் கிராக்கி ஏற்பட்டுள்ளது.

கடந்த போகத்தில் மரவள்ளிச் செய்கை குறைவாக இருந்ததால் அவற்றின் அறுவடை மிகவும் வீழ்ச்சியுற்று காணப்பட்டது. இதனால் மரவள்ளிக் கிழங்கிற்கு சந்தைகளில் பற்றாக்குறையும் கிராக்கியும் ஏற்பட்டுள்ளது.

தற்போது ஒரு கிலோ 100 ரூபா முதல் 130 ரூபா வரை விற்கப்படுகின்றது.

குறிப்பாக நிருநெல்வேலி சந்தையில் மரவள்ளிக் கிழங்குகளை பெற்றுக்கொள்வதற்கு சந்தை வியாபாரிகள் முண்டியடித்து வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.

Related posts: