குடாநாட்டில் இம்மாதம் மட்டும் 150 பேருக்கு டெங்கு!

யாழ்.மாவட்டத்தில் ஜனவரி 1ஆம் திகதி தொடக்கம் 25ஆம் திகதிவரை 450பேர் டெங்குக் காய்ச்சலால் பாதிக்கப்பட்டனர் என பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் மருத்துவர் என்.நந்தகுமார் தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாணம், சாவகச்சேரி, உடுவில், கோப்பாய், வடமராட்சி கிழக்கு உட்பட பருத்தித்துறை ஆகிய இடங்களில் டெங்கு நோய் பரவக்கூடிய சூழல் அதிகமாகக் காணப்படுகின்றது என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
தண்ணீர் சேகரிக்கும் பாத்திரங்கள் பயன்படுத்தப்படுகின்ற பயன்படுத்தப்படாத நீர்த்தாங்கிகள், கட்டி முடிக்கப்படாத கட்டங்கள், அதனைச் சுற்றியுள்ள இடங்கள், மரப்பொந்துகள், எறியப்பட்ட பிளாஸ்ரிக் பொருட்கள், இளநீர் கோம்பைகள், வெற்று சோடா போத்தல்கள், ஜஸ்கிறீம் கோப்பைகள், வெற்றுக் கலன்கள் என்பவற்றில் தண்ணீர் தேங்கி நிற்பது டெங்கு நுளம்பு பரவுதலை தீவிரப்படுத்துகின்றது என்று சுகாதாரப் பிரிவினர் தெரிவிக்கின்றனர்.
பொதுமக்கள் இது குறித்து அவதானமாகச் செயற்படுவதன் மூலம் இதனைக் கட்டுப்படுத்த முடியும் என்று அவர்கள் கூறுகின்றனர். நுளம்பு பெருகுவதற்கு வாய்ப்பான சூழலை முதலில் இல்லாதொழிக்க வேண்டும். சுகாதார சேவைகள் திணைக்களமோ அதனுடன் சேர்ந்து இணைந்து செய்யக்கூடிய திணைக்களங்களும் தனியார் நிறுவனங்களும் பொதுமக்களும் இதற்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்றார் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர். வேகமாகப் பரவும் டெங்கு நோயின் தாக்;கத்தைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவதற்கு பிராந்திய சுகாதார சேவைகள் திணைக்களம் பல நடவடிக்கைகளை எடுத்துள்ளதாகவும் அவர் கூறினார். தற்போது மழை பெய்வதால் டெங்கு நோய்ப் பரவக்கூடிய வாய்ப்பு மேலும் அதிகரி;க்க வாய்ப்பு உள்ளது என்பதையும் அவர் சுட்டிக்காட்டினார். கடந்த வருடம் ஜனவி மாதம் 543 பர் டெங்கு நோயால் பாதிக்கப்பட்டனர். அதே எண்ணிக்கையை இந்த வருடம் எட்டவிடாது தடுக்க வேண்டும் என்றார் மருத்துவர் நந்தகுமார்.
Related posts:
|
|