கிழக்கு மாகாணத்தில் இதுவரையில் 10 ஆயிரத்து 842 பேருக்கு கொரோனா – கிழக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளார் தெரிவிப்பு!

Thursday, June 10th, 2021

கிழக்கு மாகாணத்தில் இதுவரையில் 10 ஆயிரத்து 842 இற்கும் மேற்பட்ட தொற்றாளார்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர் என கிழக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளார் ஏ.அர்.எம்.தௌபீக் தெரிவித்துள்ளார்.

இன்று வியாழக்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் கருத்து தெரிவிக்கையில் – “கடந்த 24 மணித்தியாலங்களில் மட்டக்களப்பில் அதிகளவிலான தொற்றாளார்களாக 166 பேரும், திருகோணமலை மாவட்டத்தில் 52 பேரும் கொரோனா தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

அத்துடன், அம்பாறை சுகாதார அதிகாரி பிரிவில் 03 பேரும், கல்முனையில் 17 தொற்றாளார்களும் அடங்கலாக 238 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

கடந்த 7 நாட்களில் ஆயிரத்து 228 நோயாளர்கள் பதிவாகியுள்ளனர். ஆகவே இந்த வாரம் நோயாளர்களது அதிகரிப்பை அவதானிக்க கூடியதாக இருப்பதால் பொதுமக்கள் அவதானமாக இருக்கவேண்டும்.

கிழக்கு மாகாணத்தில் இதுவரை 200 மரணங்கள் பதிவாகியுள்ளதுடன் 46 மரணங்கள் இவ்வாரத்தில் பதிவாகியுள்ளது எனவும் அவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது

00

Related posts: