கிழக்குமாகாணத்தின் கல்வித்தரம் வீழ்ச்சிகண்டு வருகின்றது – கல்வியியலாளர்கள் சுட்டிக்காட்டு!

Friday, May 5th, 2017

கிழக்குமாகாண பாடசாலைகளில் கணிதம்,விஞ்ஞானம் ஆகியபிரிவுகளில் ஆசிரியர் பற்றாக்குறை நிலவுவதாகவும், இதனால் தற்போதுள்ள நிலையைப் பார்க்கிலும் மாகாணத்தின் கல்வித்தரம் மேலும் வீழ்ச்சியடையும் நிலைகாணப்படுவதாகவும்கல்வியியலாளர்கள் கவலைதெரிவித்துள்ளனர்.

கல்விப் பொதுத்தராதர உயர்தரப் பரீட்சையில் சித்தியடையும் மாணவர்கள் வைத்தியத்துறை, பொறியியல்துறை என்பவற்றுக்கு தெரிவுசெய்யப்படுபவர்களைத்தவிர ஏனையர் பல்கலைக் கழகங்களில் ஏனைய பாடங்களைக் கற்றுக்கொள்வதில் பெரிதும் அக்கறைகாட்டுவதில்லை.

இதன்காரணமாகவே பெருமளவு மாணவர்கள் பல்கலைக்கழக கல்வியைத் தவிர்ந்தகுறுகிய காலகற்கை நெறிகளை தெரிவுசெய்து கற்று வருகின்றனர். இதனூடாக மத்திய கிழக்கு நாடுகளில் வேலைவாய்ப்பை பெற்றுக்கொள்வதே அவர்களது நோக்கமாகமாகவும் உள்ளது.

இந்நிலையில் கல்விப் பொதுத்தராதர உயர்தரப் பிரிவில் கணிதம், விஞ்ஞானம் ஆகிய பாடங்களை கற்பிப்பதற்கான ஆசிரியர்களுக்கு பற்றாக்குறை ஏற்படும் நிலை உள்ளதாகவும் கல்வியியலாளர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.

அந்தவகையில் இதற்குசரியானதும், தீர்க்கமானது மானமாற்றுத் தீர்வு குறித்து சிந்திக்கவேண்டியது காலத்தின் தேவையென்றும், இதுவிடயத்தில் காலந் தாழ்த்தப்படும் கிழக்கு மாகாணத்தின் கல்விநிலை எதிர்காலத்தில் மேலும் வீழ்ச்சிகாணும் அபாயநிலைஏற்படும்என்றும் கல்வியியலாளர்கள் சுட்டிக்காட்டினர்

Related posts: