கிழக்கில் புதிய அரசியல் கட்சி உதயம்!

Thursday, October 11th, 2018

கிழக்குத் தமிழர் கூட்டமைப்பு என்ற பெயரில் புதிய அரசியல் கட்சிக்கான பிள்ளையார் சுழி கிழக்கு மாகாணத்தில் இடப்பட்டுள்ளது.

கிழக்குத் தமிழர் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் தமிழர் விடுதலைக் கூட்டணி, தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சி, ஈழ மக்கள் ஜனநாயக்கட்சி, தமிழர் சமூக ஜனநாயகக்கட்சி, அகில இலங்கை தமிழர் மகா சபை ஆகிய ஐந்து தமிழ் அரசியல் கட்சிகளும் 05.10.2010 அன்று ஒன்று கூடி ‘கிழக்குத் தமிழர் கூட்டமைப்பு’ எனும் பெயரில் புதிய அரசியல் கூட்டணியொன்றை உருவாக்கியுள்ளன.

எதிர்வரும் கிழக்கு மாகாணசபைத் தேர்தலில் கிழக்கு மாகாணத் தமிழர்களின் சார்பில் அதி உச்சபட்ச உறுப்பினர்களைப் பெற்றுக் கொள்ளும் வகையில் அனைத்துத் தமிழ் அரசியல் கட்சிகளையும் ஒரு பொதுச் சின்னத்தின் கீழ் ஓரணியில் போட்டியிட வைப்பதற்காகக் கிழக்குத் தமிழர் ஒன்றியம் எடுத்துக் கொண்ட முயற்சியின் ஒரு முக்கிய கட்டமாக இந்த அரசியல் கூட்டணி உருவாகியுள்ளதாக தெரியவருகின்றது.

Related posts: