கிளிநொச்சி குடமுருட்டிக்குளத்தின் அணைக்கட்டு பழுதடைந்தள்ளதாக விவசாயிகள் விசனம்!

Thursday, October 26th, 2023

கிளிநொச்சி மாவட்டத்தின் மேற்கு நீர்ப்பாசன திணைக்களத்தின் கீழ் உள்ள குடமுருட்டிக்குளத்தின் அணைக்கட்டு பழுதடைந்தள்ளதாக விவசாயிகள் விசனம் தெரிவிக்கின்றனர்.

8 அடி ஆறு அங்குலம் அடைவு மட்டம் கொண்ட குடமுருட்டி குளத்தின் அணைக்கட்டு பழுதடைந்து காணப்படுவதால் மழைக்காலங்களில் குளத்தின் அணைக்கட்டு உடைக்கும் சாத்தியம் காணப்படுவதாக விவசாயிகள் குறிப்பிட்டுள்ளனர்.

அணைக்கட்டை புனரமைத்துத் தருமாறு பல தடவைகள் உரிய அதிகாரிகளுக்கு அறிவித்த போதும் எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என விவாசாயிகள் வேதனை தெரிவிக்கின்றனர்.

இதனால் விவசாயிகள் மற்றும் நீர்ப்பாசன திணைக்களம் இணைந்து அணைக்கட்டை பாதுகாக்கும் நோக்கில் மண் மூடைகள் அடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர்கள்; கூறியுள்ளனர்.

அணைக்கட்டு புனரமைக்கப்படும் பட்சத்தில் இக் குளத்தின் கீழ் சுமார் 1000 ஏக்கருக்கு மேல் விவசாயத்தை மேற்கொள்ள முடியும் எனவும் விவசாயிகள் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது

000

Related posts: