கிராம உத்தியோகத்தர்கள் திணைக்கள அதிகாரிகளின் பாதுகாப்புக்கு பொலிஸ் பாதுகாப்பு – பிரதமர் ஆலோசனை!
Wednesday, May 13th, 2020கிராம சேவகர், பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் மற்றும் விவசாய திணைக்கள அதிகாரிகள் ஆகியோரது பாதுகாப்புக்கு பொலிஸ் அதிகாரி ஒருவரை சேவையில் ஈடுப்படுத்தப்படுவது சிறந்தது என பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
கிராம உத்தியோகத்தர் சங்கம் மற்றும் தொழிற்தரப்பினர் பிரதமர் மஹிந்த ராஜபக்சவை அவரது உத்தியோகபூர்வ இல்லத்தில் சந்தித்தபோதே பிரதமர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
கொரோனா வைரஸ் தாக்கத்தினால் பொருளாதார ரீதியில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்கும் போது கிராம சேவகர் மற்றும் அரச அதிகாரிகள் எதிர்க்கொள்ளும் பிரச்சினைகள் குறித்து கலந்துரையாடப்பட்டன.
சேவையில் ஈடுப்படும் போது அரச அதிகாரிகள் எதிர்க் கொள்ளும் பிரச்சினைகள் தொடர்பில் ஆராயவும், அவர்களுக்கு பாதுகாப்பு வழங்கவும் பொலிஸ் அதிகாரி ஒருவரை சேவையில் ஈடுப்படுத்துவது சிறந்தது. அத்துடன் பாதுகாப்பு முக்கவசம் உட்பட இதர பாதுகாப்பு உபகரணங்களை வழங்குவதற்கான நடவடிக்கை முன்னெடுக்கப்படும் என பிரதமர் மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது..
Related posts:
|
|