தேசியக் கொடியை ஏற்காது நாட்டில் எப்படி வாழ முடியும்? – அஸ்கிரிய பீடத்தின் அனுசாசகர்ஆனமடுவே தமம்தத்த தேரர்!

Tuesday, November 28th, 2017

சிங்கக் கொடிக்குப் பதிலாகப் புலிக்கொடி வேண்டும் என்ற நிலைப்பாட்டில் வடக்கு மாகாண சபை செயற்படுவது கண்டிக்கத்தக்கது. தேசியக் கொடியை ஏற்றுக் கொள்ளாது இலங்கையில் எப்படி வாழ முடியும். அரசு இந்த விடயத்தில் மௌனம் காக்கக்கூடாது என அஸ்கிரிய பீடத்தின் அனுசாசகர்(இரண்டாம் நிலைதோர்) ஆனமடுவே தமம்தத்த தேரர் தெரிவித்துள்ளார்.

அவர் இது தொடர்பில் மேலும் தெரிவித்துள்ளதாவது –

நாட்டின் தேசியக் கொடி வேண்டாம். இந் நாட்டின் தேசியக் கொள்கையினை ஏற்றுக்கொள்ள முடியாது என்ற நிலைப்பாட்டில் இருந்து வட மாகாண சபை செயற்பட்டு வருகின்றது. சிங்கக் கொடிக்குப் பதிலாக புலிக்கொடியைக் கோரி நிற்கின்றனர்.

இப்போதுள்ள கொடியினை மாற்றியமைத்து புலியின் ஏதேனும் ஓர் அடையாளத்தைத் தேசியக் கொடியில் பொறிக்குமாறும் அவர்கள் போராடி வருகின்றனர். இது மிகவும் மோசமான நிலமையாகும்.

இந்த நாட்டின் முக்கிய பீடமான நாம் இந்தச் செயற்பாடுகளை வன்மையாகக் கண்டிக்கின்றோம். அரசு இவர்களின் விடயத்தில் மௌனம் காப்பது பொருத்தமானதல்ல. உடனடியாக இவர்களின் விடயத்தில் நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். இப்போதே இவர்கள் மோசமான நடந்து கொள்வதாக இருந்தால் அதிகாரங்களை வழங்கிய பின்னர் நிலைமைகள் மிகவும் மோசமானதாக அமையும் என்றார்.

Related posts: