கிராமியக் கூட்டுறவு வங்கிகள் கணினி மயம்!

Thursday, February 14th, 2019

வடக்கு மாகாணத்திலுள்ள பலநோக்குக் கூட்டுறவுச் சங்கங்களுடன் இணைந்த கிராமியக் கூட்டுறவு வங்கிகள் அனைத்தும் புதிய மென்பொருளுடன் கணினி மயப்படுத்தப்படவுள்ளன என்று வடக்கு மாகாண கூட்டுறவுத் திணைக்களம் தெரிவித்துள்ளது.

வடக்கு மாகாணத்தில் கூட்டுறவு கிராமிய வங்கிகள் கடன் வழங்கல் உட்பட பல்வேறு சேவைகளை செய்து வருகின்றன. இவை பனைதென்னை வள கூட்டுறவுச் சங்கம் மற்றும் பலநோக்குக் கூட்டுறவுச் சங்கத்துடன் இணைந்தனவாக உள்ளன. கிராமிய வங்கிகளின் சேவைகளை வினைத்திறனாக மேற்கொள்ளுவதற்கு அவை கணினி மயப்படுத்தப்படவுள்ளன.

ஆரம்பத்தில் 34 வங்கிகள் இவ்வாறு கணினி மயப்படுத்தப்பட்டன. தற்போது மேலும் 36 கூட்டுறவு கிராமிய வங்கிகளை கணினி மயப்படுத்துவதற்கு ஐக்கிய நாடுகள் வதிவிட பிரதிநிதி அலுவலகம் நிதி உதவி வழங்கியுள்ளது.

இவ்வாறு 70 கூட்டுறவு கிராமிய வங்கிகள் கணினி மயப்படுத்தப்படுவதன் மூலம் பலநோக்குக் கூட்டுறவுச் சங்கங்களுடன் இணைந்த கூட்டுறவு கிராமிய வங்கிகள் அனைத்தும் வடக்கு மாகாணத்தில் கணினி மயப்படுத்தப்படும்.

Related posts: