கிண்ணியா படகுப்பாதை – ஆராய்வதற்காக நியமிக்கப்பட்ட தொழில் நுட்பக் குழுவின் அறிக்கை இன்று சமர்ப்பிப்பு!

Monday, November 29th, 2021

கிண்ணியாவில் உள்ள படகுப்பாதைகள் மற்றும் பாலங்களின் நிலைமைகள் குறித்து ஆராய்வதற்காக நியமிக்கப்பட்ட தொழில்நுட்பக் குழுவின் அறிக்கை இன்று கிழக்கு மாகாண ஆளுநர் அனுராதா யஹம்பத்திடம் கையளிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, கிண்ணியா – ‘குறிஞ்சாக்கேணி’ படகு விபத்தில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை ஏழாக அதிகரித்துள்ளது.

விபத்திற்குள்ளான 6 வயது சிறுமி சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்றுமுன்தினம் (27) உயிரிழந்தார். அதன்படி விபத்தில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 7ஆக அதிகரித்துள்ளது.

கிண்ணியா அல் அஷ்கர் வித்தியாலயத்தில் தரம் 1 ல் கல்வி பயிலும் மாணவியே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

தனது தாயுடன் பாடசாலைக்கு செல்வதற்காக படகில் பயணித்த வேலையில் தாய் உயிர் தப்பிய நிலையில் கிண்ணியா தளவைத்தியசாலையில் இருந்து சிகிச்சை பெற்று வீடு திரும்பியிருந்தார்.

கடந்த 23.11.2021 அன்று காலை இந்த படகு விபத்து சம்பவம் .இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.

Related posts:


வெள்ள இடரால் பாதிக்கப்பட்ட வடக்கு மாணவர்களிடத்தில் சிறப்புக் கவனமெடுக்கப்படும் - கல்வி அமைச்சர்!  
யாழ்.பல்கலைக்கழகத்தில் பகிடிவதை - சந்தேகத்தில் சிரேஷ்ட மாணவர்கள் 18 பேருக்கு தற்காலிக வகுப்புத் தடை ...
இலங்கைக்கு உதவுமாறு இந்தியா வெளிப்படையாக பரிந்துரைத்து வருகிறது - வெளிவிவகார அமைச்சின் உத்தியோகபூர்வ...