கிணற்றடியில் வழுக்கி விழுந்த குடும்பஸ்தர் பலி!
Tuesday, May 3rd, 2016இணுவில், கந்தசுவாமி கோயில் பகுதியிலுள்ள கிணற்றடியில் இருந்த பாசியில் வழுக்கி கீழே விழுந்த குடும்பஸ்தர் தலையில் அடிப்பட்டு நேற்று (02) உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
நான்கு பிள்ளைகளின் தந்தையான பஞ்சாட்சரம் ஸ்ரீதரன் (வயது 55) என்ற நபரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.தனது கடைசி மகளை கிணற்றடியில் கழுவிக்கொண்டிருந்தபோதே அவ்வாறு அவர் வழுக்கி கீழே விழுந்துள்ளார். தலையில் பலத்த அடி ஏற்பட்டிருந்ததால், அவர் ஸ்தலத்திலேயே உயிரிழந்துள்ளார்.
யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் திடீர் மரண விசாரணை அதிகாரி நமசிவாயம் பிறேம்குமார், மரண விசாரணைகளை மேற்கொண்டார். சட்டவைத்திய அதிகாரி முன்னிலையில் இடம்பெற்ற உடற்கூற்று விசாரணைகளின் பின் சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது
Related posts:
நாட்டில் 1600 தபால் ஊழியர் பற்றாக்குறை!
மருந்துப்பொருள் இறக்குமதிக்கு முன்னுரிமை வழங்க தீர்மானம் - அரச மருந்துக் கூட்டுத்தாபனத்தின் பதில் தல...
இந்தியாவின் 74 ஆவது குடியரசுதினம் இன்று - யாழ்ப்பாணத்திலும் இந்திய துணைத்தூதரகத்தில் விசேட நிகழ்வுகள...
|
|