காலநிலையில் மேலும் மாற்றம்!
Wednesday, April 19th, 2017நாட்டில் தற்போது நிலவும் வெப்பமான காலநிலை எதிர்வரும் மே மாதத்தின் முதல் வாரம் வரை நீடிக்கும் என வளிமண்டலவியல் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் சந்திரபால தெரிவித்துள்ளார்.
தென்மேற்கு பருவமழை இந்த மாதம் இறுதியில் ஆரம்பிக்கும் எனவும், அதனுடன் வெப்பமான காலநிலை குறைவடையும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.இலங்கையில் சூரியம் உச்சம் கொடுத்தமையினால் மாலை நேரங்களில் பெய்ய வேண்டிய மழை பெய்யாமை, வானில் மேகம் குறைவாக காணப்படுதல் மற்றும் காற்று குறைதல் ஆகியவைகள் இந்த காலநிலைக்கு காரணமாகும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
கடந்த சில மாதங்களான நிலவும் கடும் வெப்பம் காரணமாக பல்வேறுபட்ட நோய்கள் ஏற்பட்டுள்ளதுடன், பலர் நேரடியாக பாதிக்கப்பட்டுள்ளனர். சில பிரதேசங்களில் உயிரிழப்புகளும் ஏற்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
கல்வியியல் கல்லூரிகளுக்கான புதிய மாணவர்கள் இணைப்பு மே மாதம்!
எதிர்வரும் மே 11ஆம் திகதி பல்கலைக்கழகங்களை மீள ஆரம்பிக்கு நடவடிக்கை - பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்கு...
தேர்தல் குறித்த முக்கிய தீர்மானத்தினை எடுப்பதற்காக வெள்ளியன்று கூடுகின்றது தேர்தல்கள் ஆணைக்குழு!
|
|