காலஞ்சென்ற ஈ.ஆர் திருச்செல்வத்தின் பூதவுடலுக்கு டக்ளஸ் தேவானந்தா இறுதி அஞ்சலி!

காலஞ்சென்ற ஈ.ஆர்.திருச்செல்வத்தின் பூதவுடலுக்கு ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா இறுதி அஞ்சலி செலுத்தினார்.
இல.16, ஆசீர்வாதம் லேன், ஆஸ்பத்திரி வீதி, யாழ்ப்பாணத்தில் உள்ள அன்னாரது இல்லத்தில் இறுதி அஞ்சலிக்காக பூதவுடல் வைக்கப்பட்டிருந்த நிலையில் இன்றையதினம் (29) அங்குசென்ற செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா இறுதி அஞ்சலி செலுத்தினார்.
இதனிடையே அன்னாரின் பிரிவால் துயருற்றிருக்கும் குடும்பத்தினருக்கும் உற்றார் உறவினர்களுக்கும் நண்பர்களுக்கும் டக்ளஸ் தேவானந்தா தமது ஆறுதலையும் அனுதாபத்தையும் தெரிவித்துக் கொண்டார்.
ஈழ மக்கள் ஜனநாயக கட்சியுடன் நெருங்கிய உறவைக்கொண்டிருந்த அமரர் ஈ.ஆர்.திருச்செல்வம் நேற்றையதினம் (28) காலமானார். அன்னாரின் பூதவுடல் யாழ்.கொஞ்சேஞ்சி மாதா சேமக்காலையில் இன்றையதினம் நல்லடக்கம் செய்யப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
|
|