காரைநகர் பனை தென்னை வள அபிவிருத்தி கூட்டுறவுச்சங்கத்திற்கு நவீன வெல்ல இயந்திரங்கள் வழங்கிவைப்பு!

காரைநகர் பனை தென்னை வள அபிவிருத்தி கூட்டுறவுச்சங்கத்திற்கு 6.2 மில்லியன் ரூபா பெறுமதியான நவீன பனை வெல்ல பொறித்தொகுதி வழங்கப்பட்டுள்ளது.
யாழ்ப்பாணம் – காரைநகர் பனை அபிவிருத்தி சபை உற்பத்தி நிலையத்தில் இடம்பெற்ற நிகழ்வின் போதே இலங்கை பனை அபிவிருத்தி சபையின் தலைவர் கிருஷாந்த பத்திராயவினால் குறித்த கூட்டுறவு சங்கத்திற்கு கையளிக்கப்பட்டது.
இந்த பனை வெல்லத் தொகுதியால் யாழ்.மாவட்டத்தில் மாதமொன்றிற்கு 3 ஆயிரம் கிலோக்கிராம் பனை வெல்லத்தை உற்பத்தி செய்யமுடியும் என பனை அபிருத்தி சபையின் தலைவர் தெரிவித்துள்ளார்.
நிகழ்வில் பனை அபிவிருத்தி சபையின் அதிகாரிகள், உத்தியோகத்தர்கள், யாழ் மாவட்ட பனை தென்னைவள பலநோக்கு கூட்டுறவுச்சங்கங்களின் தலைவர்கள் மற்றும் உற்பத்தி தொழிலாளர்கள் என பலரும் கலந்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
தகுதியானவர்களுக்கு தகுதிகளை வழங்கி சிறந்த சமூகத்தை கட்டியெழுப்ப வேண்டும் - சபாநாயகர் கரு ஜயசூரிய!
யாழ் மாவட்டத்தில் கொரோனா தொற்றினால் இதுவரை 55 பேர் உயிரிழப்பு!
நாட்டில் முழுமையாக சிமெந்து உற்பத்தியை மேற்கொள்வது தொடர்பில் அவதானம் - நிதியமைச்சர் பசில் ராஜபக்ஷ தெ...
|
|