காரைநகரில் காணாமல் போன மாணவி கிணற்றிலிருந்து சடலமாக மீட்பு! – கொலை என சந்தேகம்!
Sunday, August 14th, 2016காரைநகர் – களபூமி பகுதியில் நேற்றையதினம் மர்மமான முறையில் காணமல் போயிருந்த பாடசாலை மாணவி இன்று கிணற்றில் இருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
காரைநகர் திக்கரையை சேர்ந்த சன்முகராஜ குருக்களின் மகளான துவாரகா எனும் பதினாறு வயதான பாடசாலை மாணவியே இன்று (14) மாலை கிணற்றிலிரந்த சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
இது தொடர்பாக தெரியவருவதாவது – நேற்றையதினம்(13) இரவு எட்டுமணியளவில் வீட்டில் இருந்த நிலையில் குறித்த சிறுமி காணாமல் போயிருந்தார். இதனையடுத்து காணாமல் போன மாணவியை அவரது பெற்றோர் தேடிய நிலையில் இது தொடர்பாக ஊர்காவல்துறை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்திருந்தனர்.
குறித்த மாணவியை தேடும் நடவடிக்கையில் பொலிஸார் மற்றும் பெற்றோர் இனைந்து ஈடுபட்டிருந்தநிலையில் மாணவியின் வீட்டில் இருந்து சுமார் 300 மீற்றர் துரமளவில் வளவொன்றுக்குள் உள்ள கிணற்றுள் இருந்து மாணவி சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
குறித்த வளவிற்குள் தேங்காய் பறிப்பதற்காக வந்த சிலரே கிணற்றுள் மாணவியின் சடலமிருப்பதை கண்டு பொலிஸாருக்கு அறவித்துள்ளனர். மாணவி எவ்வாறு வீட்டில் இருந்து காணாமல் போயிருந்தார் இவர் கொலை செய்யப்பட்டு கிணற்றுள் போடப்பட்டாரா அல்லது தற்கொலை செய்து கொண்டாரா என்பது தொடர்பில் ஊர்காவல்துறை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.
Related posts:
|
|