காரணமின்றி அதிக கட்டணங்கள் அறவீடு – நிவாரணம் வழங்குமாறு மின்சாரத்துறைக்கு பரிந்துரை!

Wednesday, July 8th, 2020

கொரோனா முடக்கல் காலத்தில் காரணமின்றி அதிகமான மின்சார கட்டணங்கள் அறவீடு கணிப்பீடு செய்யப்பட்டமை தொடர்பில் ஆராய்ந்த ஐந்துபேர் கொண்ட குழுவினர், பாவனையாளர்களுக்கு நிவாரணம் வழங்கப்படவேண்டும் என்று பரிந்துரை செய்துள்ளனர்.

இந்த நிலையில் குறித்த பரிந்துரை தொடர்பில் அமைச்சரவையில் பேசப்படவுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

அமைச்சர் மஹிந்த அமரவீரவினால் அமைக்கப்பட்ட இந்த குழுவுக்கு அமைச்சின் மேலதிக செயலாளர் ஹேமந்த சமரகோன் தலைமை ஏற்றிருந்தார்.

இந்தக்குழு நேற்று தமது அறிக்கையை அமைச்சரிடம் கையளித்தது. இதனையடுத்து குழுவின் பரிந்துரையின் அடிப்படையில் நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று அரசாங்கத்தரப்பு தெரிவித்துள்ளது.

Related posts: