காயமடைந்த இராணுவ வீரருக்கு வெளிநாட்டில் சிகிச்சை!

Saturday, November 19th, 2016

அண்மையில் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த போது கண்ணில் காயம் ஏற்பட்ட அங்கவீனமுற்ற இராணுவ வீரருக்கு வெளிநாட்டில் சிகிச்சையளிப்பதற்கு இராணுவத் தளபதி ஆலோசனை வழங்கியுள்ளார்.

அண்மையில் அங்கவீனமுற்ற இராணுவ வீரர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்த போது, பொலிஸார் கண்ணீர் புகைத் தாக்குதல் மேற்கொண்டர்.  இதனையடுத்து ஏற்பட்ட அமைதியின்மையில் ஒய்வு பெற்ற, அங்கவீனமடைந்த இராணுவ வீரர் ஒருவரின் கண்ணில் காயமேற்பட்டது.

இந்நிலையில் தேவையேற்படின் காயமடைந்த இராணுவ வீரருக்கு அரச செலவில் வெளிநாடொன்றுக்கு அனுப்பி சிகிச்சையளிக்க இராணுவ தளபதி ஆலோசனை வழங்கியுள்ளதாக இராணுவப் பேச்சாளர் ரொஷான் செனவிரட்ன தெரிவித்துள்ளார்.

timthumb

Related posts: