காயங்களை ஆற்றுவதன் ஊடாக எதிர்காலத்தை வென்றெடுப்போம் – தேசிய ஒருமைப்பாடு மற்றும் நல்லிணக்க அலுவலகம்!

Friday, June 15th, 2018

தேசிய நல்லிணக்கத்தை கீழ் மட்டத்திலிருந்து ஏற்படுத்துவதை நோக்காகக் கொண்ட இறந்த காலக் காயங்களை ஆற்றுவதன் மூலம் எதிர்காலத்தை வென்றெடுத்தல் செயற்றிட்டத்தை மேலும் 14 மாவட்டங்களில் முன்னெடுப்பதற்குத் தீர்மானித்துள்ளதாகத் தேசிய ஒருமைப்பாடு மற்றும் நல்லிணக்க அலுவலகம் தெரிவித்தது.

இது தொடர்பில் தேசிய ஒருமைப்பாடு மற்றும் நல்லிணக்க அலுவலகம் விடுத்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டதாவது –

தேசிய நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதற்கான செயற்றிட்டத்தின் முதற்கட்டம் யாழ்ப்பாணம் அநுராதபுரம் இரத்தினபுரி ஆகிய மாவட்டங்களைக் கேந்திரமாகக் கொண்டு முன்னெடுக்கப்பட்டிருந்தது. அதன் மூலம் பெற்றுக்கொண்ட அனுபவங்களைக் கொண்டு இரண்டாம் கட்டச் செயற்றிட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது.

அம்பாறை மட்டக்களப்பு காலி களுத்துறை கிளிநொச்சி குருணாகல் மன்னார் மாத்தறை மொனராகலை முல்லைத்தீவு நுவரெலியா புத்தளம் திருகோணமலை வவுனியா ஆகிய மாவட்டங்கள் தேசிய நல்லிணக்கச் செயற்றிட்டத்தின் அடுத்த கட்டத்துக்காகத் தெரிவு செய்யப்பட்டன.

தேசிய நல்லிணக்கத்தை ஏற்படுத்தும் நோக்கத்துடன் முன்னெடுக்கப்படும் இந்தச் செயற்றிட்டத்தைத் தொடர்ந்து முன்னெடுக்கும் வகையில் அரச அதிகாரிகள் மற்றும் சிவில் சமூகக் குழுக்களை விழிப்பூட்டல் தேசிய நல்லிணக்கம் தொடர்பில் மக்களை அறிவூட்டல் பிரதேச அலுவலகங்கடாகப் பல்வேறு இனமக்களுக்கு இடையிலான புரிந்துணர்வை வலுப்படுத்தல் போன்ற நடவடிக்கைகளையும் தேசிய ஒருமைப்பாடு மற்றும் நல்லிணக்க அலுவலகம் முன்னெடுக்கவுள்ளது.

தேசிய ரீதியாகவும் மாவட்ட ரீதியாகவும் முன்னெடுக்கப்படும் தேசிய நல்லிணக்கச் செயற்றிட்டத்தில் பங்குகொள்வதற்கு 20 சிவில் அமைப்புகளும் தெரிவுசெய்யப்பட்டதுடன் அவற்றின் வலுவான ஒத்துழைப்பையும் பெற்றுக்கொள்ளவுள்ளோம் என்றுள்ளது.

Related posts: