காத்தான்குடியில் இடம்பெற்ற ஒத்திகை – வெடிபொருட்களை வழங்கியதாக ஜஹ்ரானின் சகோதரருடன் இருந்தவர் தெரிவிப்பு – பொலிஸ் ஊடகப் பேச்சாளர்!

Friday, April 30th, 2021

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் கைதுசெய்யப்பட்ட சந்தேகநபர் ஒருவர் தான் ஜஹ்ரான் ஹாசிமின் சகோதரரிற்கு வெடிபொருட்களை வழங்கினார் என தெரிவித்துள்ளார் என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

ராஜிக்ராசா என்பவரே விசாரணைகளின் போது இதனை தெரிவித்துள்ளார் என குறி;ப்பிட்டுள்ள பொலிஸ் ஊடகப் பேச்சாளர் புதிய ஆதாரங்களை தொடர்ந்து அவரை பயங்கரவாத விசாரணை பிரிவிற்கு மாற்றியுள்ளதாக தெரிவித்துள்ளார்.

உயிர்த்த ஞாயிறு தாக்குதலிற்கு முன்னர் காத்தான்குடியில் ஜஹ்ரான் குழுவினர் குண்டு வெடிப்பிற்கான ஒத்திகையை முன்னெடுத்தமை குறித்து தான் அறிந்திருந்ததாக ராசிக்ராசா தெரிவித்துள்ளார் என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

குறித்த ராஜிக்ராசா, ஜஹ்ரானின் சகோதரரிடம் தான் வெடிமருந்துகளை வழங்கியதை ஏற்றுக்கொண்டுள்ளார், என பொலிஸ் பேச்சாளர் தெரிவித்துள்ளார்

காத்தான்குடியில் 2018 இல் மேற்கொள்ளப்பட்ட ஒத்திகையின் போது ஜஹ்ரானின் சகோதரர் ரில்வான் காயமடைந்தார் என தகவல்கள் வெளியாகியிருந்தன, அந்த ஒத்திகை இடம்பெற்ற வேளை ராஜிக்ராசா ரில்வானுடன் காணப்பட்டுள்ளார்.

இருவரும் இணைந்தே ஒத்திகையில் ஈடுபட்டமை பயங்கரவாத விசாரணை பிரிவினரின் விசாரணைகளின் போது   தெரியவந்துள்ளதாகவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

காத்தான்குடியை சேர்ந்த 28 வயதான ராஜிக்ராசா சில மாதங்களிற்கு முன்னர் கல்முனையில் கைதுசெய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related posts: