காணாமல் போனோர் அலுவலகம் : ஐ.நா. பாராட்டு!

இலங்கையில் காணாமல் போனோர் அலுவலகம் அமைப்பது குறித்த விடயத்திற்கு ஐக்கிய நாடுகள் சபை செயலாளர் நாயகம் அன்டோனியோ குட்டேரஸ் பாராட்டுக்களைத் தெரிவித்துள்ளார்.
ஐக்கிய நாடுகள் செயலாளர் நாயகத்தின் பிரதிப் பேச்சாளர் பர்ஹான் ஹக் விடுத்துள்ள அறிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது. குறித்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது ‘காணாமல் போன உறவுகள் பற்றிய உண்மையைத் தேடும் அனைத்து இலங்கையர்களுக்கும் ஒரு குறிப்பிடத்தக்க மைல்கல் ஆகும். காணாமல் போன உறவுகள் குறித்த விடயங்களில் இலங்கை அரசின் செயற்பாடுகள் நம்பிக்கையளிக்கின்றன.
ஐக்கிய நாடுகள் சபை இந்த செயன்முறைக்கு ஆதரவளிப்பதுடன் தேவையான ஆலோசனைகளையும் வழங்குவதற்குத் தயாராக இருக்கின்றது.காணாமல் போனோர் தொடர்பான அலுவலகம் விரைவாக இயங்கும் என எதிர்பார்ப்பதுடன் மக்களுக்கான தீர்வுகள் விரைவில் கிடைக்கப்பெறும் எனவும் நம்புகின்றோம்” என குறித்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை காணாமல் போனோர் அலுவலகம் தொடர்பான சட்டமூலத்தில் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன நேற்றையதினம் கையொப்பமிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
|
|