காணாமல் போதல் , கடத்தல்  சம்பவங்களை சர்வதேச மனிதாபிமான சட்டத்தின் கீழ் பார்க்கப்பட வேண்டும்!

Tuesday, September 13th, 2016

 

காணாமல் போனோர் தொடர்பான விசாரணைகளை மேற்கொண்ட மெக்ஸ்வெல் பரணகமவின் ஆணைக்குழு, தமது இறுதி அறிக்கையில், உண்மையான உள்ளூர் தீர்ப்பாயம் ஒன்று அமைக்கப்பட வேண்டும் என்று பரிந்துரை செய்துள்ளது.

இந்த தீர்ப்பாயத்தில் வெளிநாட்டு நீதிபதிகளின் பங்களிப்பு தேவையில்லை. எனினும், பொறிமுறைக்கு சர்வதேச தொழில்நுட்ப உதவிகளும், கண்காணிப்பாளர்களும் ஏற்றுக்கொள்ளப்படலாம் என்றும் அவர் பரிந்துரை செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

குறித்த அறிக்கை கடந்த மாதம் ஜனாதிபதியிடம் கையளிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.இதேவேளை, உண்மை மற்றும் நல்லிணக்கம் தொடர்பான ஆணைக்குழு ஒன்று நல்லிணக்க நடவடிக்கைகள் தொடர்பில் அவசியம் என்று பரணகம ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது.

காணாமல் போதல் மற்றும் கடத்தல் சம்பவங்கள் யாவும் சர்வதேச மனிதாபிமான சட்டத்தின் கீழ் பார்க்கப்பட வேண்டும்.அவை கடுமையான குற்றங்களாகவே கருதப்பட்டு தண்டனை வழங்கப்படவேண்டும் என்றும் பரணகம ஆணைக்குழு பரிந்துரைத்துள்ளது.

உண்மையை கண்டறியும் ஆணைக்குழுவின் முன்னால் பிரசன்னமாகாதவர்கள், மேல்நீதிமன்றத்தின் குற்றவியல் விசாரணைகளுக்கு உட்படுத்தப்பட வேண்டும். இந்த நிலையில் உண்மை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவை பொறுத்தவரையில் அது போருக்கு பின்னரான தேவைகளுக்கு சிறந்த பொறிமுறையாக இருக்கும் என்றும் பரணகம ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது.

Capture

Related posts: