காணாமலாக்கப்பட்டவர்களின் உறவினர்கள் கிளிநொச்சியில் கவனயீர்ப்புப் போராட்டம்.

Tuesday, May 30th, 2017

காணாமலாக்கப்பட்டவர்களின் உறவினர்கள் கிளிநொச்சியில் ஏ9 வீதியை வழிமறித்து கவனயீர்ப்புப் போராட்டமொன்றை இன்றையதினம் முன்னெடுத்துள்ளனர்.

காணாமலாக்கப்பட்ட தமது உறவுகள் தொடர்பில் தொடர்ச்சியான கவனயீர்ப்பு போராட்டத்தை முன்னெடுத்து வருகின்ற நிலையில் எந்தத் தரப்பாலும் இதுவரையில் எவ்விதமான பதில்களும் தமக்கு

கிடைக்கப் பெறவில்லையென்று போராட்டத்தில் ரூடவ்டுபட்டவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர். இன்றைய கவனயீர்ப்புப் போராட்டத்தில் சுமார் 800க்கும் அதிமானோர் பங்கெடுத்திருந்ததாகவும் போராட்டக்காரர்கள் தமது உறவுகளை நினைந்து கண்ணீர் விட்டுகதறியழுதனர். இதனிடையே பொதுமக்களுக்கும்ரூபவ் போக்குவரத்துக்கும் இடையூறுகளை எற்படுத்தாமல் அமைதியானமுறையில் போராட்டத்தை முன்னெடுக்குமாறு கிளிநொச்சி மாவட்ட நீதிமன்றம் காணாமலாக்கப்பட்டவர்களின் உறவினர்களின் போராட்டத்துக்கு அனுமதி வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related posts: