கல்வி அமைச்சின் இடமாற்றப் பிரிவுக்கு ஆசிரியர்களை அழைக்கும் செயற்பாட்டை இடைநிறுத்தத் தீர்மானம் – கல்வி அமைச்சு அறிவிப்பு!

Monday, November 1st, 2021

கொரோனா தொற்றுப் பரவல் காரணமாக கல்வி அமைச்சின் இடமாற்றப் பிரிவுக்கு ஆசிரியர்களை அழைக்கும் செயற்பாட்டை இடைநிறுத்தத் தீர்மானித் துள்ளதாகக் கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

தேசிய பாடசாலைகளின் ஆசிரியர் இடமாற்றம் தொடர்பில் காணப்படும் பிரச்சினைகள் குறித்து அறிவிக்க விசேட தொலைபேசி இலக்கங்கள் வழங்கப்பட்டுள்ளன. அதற்கமைய, 011 27 84 434, 011 27 85 141 அல்லது 011 27 85 150 என்ற இலக்கங்களுக்குத் தொடர்பை ஏற்படுத்தி தேவையான தகவல்களைப் பெற்றுக் கொள்ள முடியும் என கல்வி அமைச்சு அனைத்து ஆசிரியர்களுக்கும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது

Related posts: