கல்வியல் கல்லூரிகளுக்கு விண்ணப்பங்களை அனுப்புவதற்கான கால எல்லை மேலும் நான்கு நாட்களுக்கு நீடிப்பு!

Friday, September 25th, 2020

தேசிய கல்வியல் கல்லூரிகளுக்கு விண்ணப்பங்களை அனுப்புவதற்காக கால எல்லை மேலும் நான்கு நாட்களுக்கு நீடிக்கப்பட்டுள்ளது.

குறித்த விண்ணப்பங்களை அனுப்புவதில் ஏற்பட்ட தவறுகள் மற்றும் தாமதங்களை நிவர்த்திக்கும் நோக்கிலே, இந்த கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.

இதன்படி நாளைமுதல் எதிர்வரும் 30 ஆம் திகதி வரை குறித்த விண்ணப்பங்களை அனுப்ப முடியும் என அந்த அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

குறித்த காலப்பகுதியில் கல்வி அமைச்சின் உத்தியோகப்பூர்வ இணைத்தளம் அல்லது www.moe.gov.lk  என்ற இணையத்தளத்திற்கு பிரவேசித்து உயர்தர பரீட்சை இலக்கத்தை பயன்படுத்தி விண்ணப்பிக்க முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த முறை விண்ணப்பங்களை இணையத்தின் ஊடாக மாத்திரம் முன்வைப்பதற்கு கல்வி அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: