கல்விமுறை மாணவர் மீது அழுத்தத்தைக் கொடுக்கின்றது – கல்வி அமைச்சர் அகிலவிராஜ்!

Saturday, October 14th, 2017

பின்லாந்துக் கல்விமுறை மற்றும் இலங்கைக் கல்விமுறை தொடர்பாக ஒப்பிட்டு ஆராயும் போது இலங்கைக் கல்வி முறைமைகளின் ஊடாக மாணவர்களுக்கு அழுத்தம் பிரயோகிக்கப்பட்டுள்ளதை அறியமுடிகின்றது  என கல்வி அமைச்சர் அகிலவிராஜ் காரியவசம் தெரிவித்தார்

ஒவ்வொரு பாடத்திலும் ஒரு வருடத்துக்கு கற்பிக்கப்படும் விடயங்களின் அளவு அதிகமாகும் என்பது தெரியவருகின்றது. இவ்வாறு கல்வி அமைச்சர் அகிலவிராஜ் காரியவசம் தெரிவித்தார்.

பின்லாந்துக்குச் சென்று அங்குள்ள கல்வி முறைமைகளைப் பார்வையிட்ட பின்னர் அவர் விடுத்துள்ள பத்திரிகைக் குறிப்பிலேயே மேற்கண்டவாறு கூறப்பட்டுள்ளது.

அதில் மேலும் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது;

வேறு நாடுகளுடன் ஒப்பிடுகையில் பின்லாந்து பாடசாலைகளில் மாணவர்கள் கல்வி கற்கும் நேரம் வரையறுக்கப்பட்டுள்ளதை அவதானிக்கமுடிந்தது. குறைந்த கல்வி மூலம் செயன்முறை கல்விக்கு முன்னுரிமை வழங்குதல். மட்டுப்படுத்தப்பட்ட பரீட்சைகள், சகல ஆசிரியர்களுக்கும் குறைந்த பட்சம் பட்டம் மற்றும் பட்டப்பின் படிப்பு கற்கை நெறி கட்டாயமாகும். ஒவ்வொரு வகுப்பிலும் குறைந்த எண்ணிக்கையிலான மாணவர்கள் இருப்பதனால் ஒவ்வொரு மாணவனையும் தனிப்பட்டரீதியில் கவனம் செலுத்துதல் போன்ற சிறப்பம்சங்கள் பின்லாந்து கல்வி முறைமைகளுக்குள் இருக்கின்றது.

பின்லாந்தில் செயன்முறைக் கல்வியில் கூடுதல் அவதானம் செலுத்தப்படுகின்றது.

எமது நாட்டின் கல்வித்துறையில் பல நூற்றாண்டுகளாக பெரிய மாற்றங்கள் ஏற்பட்டதில்லை. பாடத்தட்டங்களில் திருத்தங்கள் மேற்கொள்ளல் நவீன உலகத்திற்கு ஏற்றவகையில் கல்வி முறைமையொன்றை பெற்றுக் கொள்வதற்கு எங்களால் முடியாமல் போயுள்ளது. நாங்கள் ஆரம்பித்துள்ள 13 வருடங்கள் கட்டாய பாடசாலை கல்வி மற்றும் அறிமுகப்படுத்தப்படவுள்ள 26 பாடத்தட்டங்கள் ஊடாக எதிர்காலத்தில் எமது கல்வித்துறையில் பெரியதொரு புரட்சியை ஏற்படுத்துவதற்கு நாங்கள் எதிர்பார்த்துள்ளோம்.

பின்லாந்தில் பரீட்சை முறைசார் நடைமுறைகள் செயற்படத்தப்படுவதில்லை. மாறாக ஆரம்பக் காலம் முதல் மாணவர்களின் திறைமை மற்றும் ஆற்றல் அடிப்படையில் அவர்கள் செல்லக்கூடிய வழியை காட்டிக் கொடுக்கும் செயன்முறையொன்று பின்பற்றப்பட்டு வருகின்றது. இவற்றை நாம் எதிர்காலத்தில் முன்னெடுப்போம் – என்றார்.

Related posts: