கல்வித் துறையில் அவசியமாக தீர்க்கப்பட வேண்டிய பிரச்சினைகளுக்கு டிசம்பர் மாதத்திற்குள் தீர்வு – அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவிப்பு!

கல்வித்துறையில் அவசியமாக தீர்க்கப்பட வேண்டிய பிரச்சினைகளை எதிர்வரும் டிசம்பர் மாதத்திற்குள் ஒழுங்கமைக்கப்படும் என கல்வி அமைச்சர் கலாநிதி சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.
பரீட்சை நடத்துதல், பெறுபேறு வெளியிடல், பாடப் புத்தங்கள் விநியோகித்தல், பல்கலைக்கழக பிரவேசம் போன்ற கல்வித்துறையின் நடவடிக்கைகளை எதிர்வரும் டிசம்பர் மாதத்திற்குள் சீரமைக்க முடியும் என கல்வி அமைச்சர் கலாநிதி சுசில் பிரேமஜயந்த நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.
புதிய கல்வி அமைச்சின் செயலாளராக எம்.நிஹால் ரணசிங்க தனது கடமைகளை பொறுப்பேற்கும் நிகழ்வில் கலந்துக் கொண்டு கருத்து தெரிவித்தப் போதே அமைச்சர் இதனைத் தெரிவித்துள்ளார்.
பொருளாதார நெருக்கடியினுடனான சூழ்நிலையில் மாணவர்களுக்கு மதிய உணவு வழங்தாக அவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
000
Related posts:
நாடாளுமன்றத்தில் குழப்பம்: தற்காலிகமாக ஒத்திவைப்பு!
தேசிய பாடசாலை ஆசிரியர்களுக்கு இடமாற்றம்!
நாளையதினம் நாடு முழுவதுமுள்ள LIOC எரிபொருள் நிலையங்களை மூட ஆலோசனை!
|
|