கலைப்பீடத்தின் நடவடிக்கைகள் மீளஆரம்பம்!
Monday, July 25th, 2016
யாழ். பல்கலைகழக கலைப்பீடத்தின் பரீட்சைகள் மற்றும் கற்றல் செயற்பாடுகள் இன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளதுடன் கணிசமான மாணவர்கள் சமுகமளித்துள்ளதாகவும் யாழ் பல்கலைகழக கலைப்பீடத்தின் பீடாதிபதி பேராசிரியர் என். ஞானகுமாரன் தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாண பல்கலைகழக கற்றல் செயற்பாடுகள் ஆரம்பமாகியுள்ள நிலையில் தற்போதைய நிலைபாடு தொடர்பில் தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார் –
கடந்த 16ஆம் திகதி யாழ்.பல்கலையில் இடம்பெற்ற சம்பவமானது துர்திஸ்டவசமானது. எனினும் இந்தசம்பவமானது நீடிக்கவும் இல்லை குழப்ப நிலை தொடரவும் இல்லை, குறுகிய காலத்தில் யாழ்ப்பாண பல்கலைகழக நிர்வாகம் எடுத்த நடவடிக்கையின் பிரகாரம் இன்று கலைப்பீடத்தின் பரீட்சைகள் மற்றும் முதலாம் ஆண்டு மாணவர்களுக்கான கற்றல் செயற்பாடுகளும் ஆரம்பமாகியுள்ளது. இதுமாத்தரமன்றி இராமநாதன் நுன்கலைபீடம் மற்றும் ஊடகல்வி டிப்ளோமா கற்கைநெறி மாணவர்களுக்கான பரீட்சைகளும் ஆரம்பமாகியுள்ளது.
இந்தநிலையில் மாணவர்கள் எவ்வித அச்சமின்றி தமது கல்வி நடவடிக்கையினை தொடர்ந்துள்ளனர். அந்தளவிற்கு நிலைமை சுமுகமாக காணப்படுவதுடன் மாணவர்களின் பாதுகாப்பும் உறுதிபடுத்தப்பட்டுள்ளது. ஆகவே மாணவர்கள் குழப்பமின்றி தமது கல்வி நடவடிக்கையினை சீராக தொடரமுடியும் என கலைப்பீடாதிபதி மேலும் தெரிவித்துள்ளார்.
Related posts:
|
|