கலப்பு முறை தேர்தலுக்கு 350 கோடி ரூபா செலவு!

Tuesday, December 5th, 2017

அடுத்தாண்டு முற்பகுதியில் இடம்பெறவுள்ள உள்@ராட்சித் தேர்தல்களுக்கு 350 கோடி ரூபா செலவாகுமென சிரேஸ்ட தேர்தல் அதிகாரி கூறியுள்ளார். முதல் முறையாக புதிய கலப்பு முறையில் உள்ளூராட்சித் தேர்தல் இடம்பெறவுள்ளது.

புதிய முறைமை தொடர்பாக வாக்காளர்களுக்கு விளக்கமளிப்பதற்கான செயற்பாடுகளையும் இந்தச் செலவு உள்ளடக்கியது என்று மேலதிக ஆணையாளர் எம்.எம்.முகம்மட் தெரிவித்திருக்கிறார்.

புழைய தொகுதி வாரி முறை 60 வீதமான உறுப்பினர்களும் விகிதாசார பிரதிநிதித்துவ முறையில் 40 வீதமான உறுப்பினர்களும் தெரிவு செய்யப்படவுள்ளனர். அதேவேளை அரசியல் கட்சிகள் மற்றும் வேட்பாளர்களை உள்ளடக்கிய வெவ்வேறான நிகழ்ச்சித் திட்டங்களும் இருக்குமென அவர் கூறியுள்ளார்.

பெப்ரவரி 15 க்கு முன்னர் தேர்தல் இடம்பெறும் என தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மகிந்த தேசப்பிரிய கூறியிருந்தார். 2018 ஆம் ஆண்டுக்கான தேர்தல் திணைக்களத்தின் வரவு செலவுத் திட்ட ஒதுக்கீடு 550 கோடி ரூபாவாகும்.

இதில் அரைவாசிக்கும் மேற்பட்ட தொகை உள்ளூராட்சித் சபைத் தேர்தல்களுக்காக செலவிடப்படும் என்று முகம்மட் கூறியுள்ளார். வெவ்வேறான பயிற்சித் திட்டங்களும் மேற்கொள்ள திட்டமிடப்பட்டிருப்பதாகவும் முகம்மட் தெரிவித்துள்ளார். உள்ளூராட்சித் சபைத் தேர்தல்களில் பதிவு செய்யப்பட்ட வாக்காளர்களின் எண்ணிக்கை 150,000 ஆல் அதிகரிக்கும். கடந்த தேர்தலில் வாக்களிக்க தகுதி பெற்ற வாக்காளர்கள் 15.7 மில்லியனுக்கும் அதிகமாவர்.

கம்பஹா மாவட்டமே அதிக எண்ணிக்கையான பதிவு செய்யப்பட்ட வாக்காளர்களைக் கொண்டிருக்கின்றது. அந்த மாவட்டத்தின் வாக்காளர் எண்ணிக்கை 17 இலட்சத்திற்கும் அதிகமாகும். கொழும்பு மாவட்டத்தில் 16 இலட்சத்திற்கும் அதிகமான வாக்காளர்கள் உள்ளனர். அரசியல் கட்சிகள் இன்று திங்கட்கிழமை தொடக்கம் எதிர்வரும் 21 வரை வேட்பு மனுக்களை தாக்கல் செய்ய முடியும். டிசம்பர் 21 இல் தேர்தல் திகதி அறிவிக்கப்படவுள்ளது.

Related posts: